பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

7



அடுத்த மடலில் “தொடங்குவதற்கு முன் நன்மை, தீமைகளை விவாதிப்பது வேறு; தொடங்கிய பின் ஆதரவு தருவது வேறு” என்று குறிப்பிட்டு நான், கேட்டிருந்தபடி புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் என்ற நூலினையும் வெளியிட அனுப்பியிருந்தார். பின்னர் தொடர்ந்து பல நூல்களை வெளியிட வாய்ப்பளித்தார்.

மக்கள் வெளியீடு இன்று நிலைபெற்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்குப் பேராசிரியர் அவர்கள் தந்த ஆதரவே முதல் அடிப்படையாக அமைந்தது என்று கூறலாம்.

ஆய்வுப் பேரறிஞர் நா. வா. அவர்கள் வாழ்நாள் முழுதும் எதற்காகப் பணி புரிந்தாரோ, எந்தக் கொள்கைகளை ஏற்றுச் செயல்பட்டாரோ அவ்வழியில் பயணம் தொடர மக்கள் வெளியீடு உறுதி கொள்கிறது. அதையே அவருக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாக ஏற்கிறது.

மே. து. ராசு குமார்

இரண்டாம் அச்சுக்கான பதிப்புரை

பேராசிரியர் நாவா அவர்களின் மறைவுக்குப் பின், அவர்களுடைய படைப்புக்களையெல்லாம் தொகுப்பு நூல்களாக வெளியிடவேண்டும் என்ற முனைப்புடன் பணிகளைத் தொடங்கியும், எண்ணியவாறு—எதிர்பார்த்தவாறு கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக இது முடிக்கப்படவில்லை. முதல் பதிப்பில் குறிப்பிட்ட நிலையே தொடர்வது வேதனைமிக்கது. நாவா அவர்களுடைய ஆய்வு மக்கள்-மாணாக்கர் பலராக இருந்தும், அவர்கள் அனைவரும் அடிப்படை நோக்கு களில் இணைந்திருந்தும், கொள்கை—கோட்பாடுகளில் இயைந்திருந்தும் இப்பணி நிறைவேறவில்லை என்பது வெறும் இடரினால் என்றில்லாது, இழுக்காகவே கொள்ளத்தக்கது.

இந்த இயலாமைக்கான முழுப்பொறுப்பையும், ஏற்பாடுகளை முன்னின்று செய்த நான்தான் ஏற்கவேண்டும்.

இப்போது, நாவா படைப்புகள் குறித்து பிஎச்டி ஆய்வு செய்துவரும் பேரா. இரா. காமராசு அவர்கள் தொகுத்த ‘நாவாவின் படைப்புகள்-நூலடைவு’ என்ற ஒரு நூலினை, பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி-