பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும் பகுதி-காதல் 10R மகள் தாயிடம் கூறுவது: பாலும் பழமும் வேண்டாம்; பழனிச் சம்பா சோறும் வேண்டாம்! ஏழெருமைத் தளிரும் வேண்டாம்; ஏத்தி விடு கப்பலிலே. மகள் தன் கணவனிடம் கூறுவது : பட்டுக் கரை வேட்டியில்ே பாலுத்திச் சோறுகட்டி இன்பமுள்ள கட்டுச் சேர்த்த தின்பம் வாங்க மன்னவரே. சன்னக்கம்பி வேட்டியிலே பொன்னுங் கம்பி ஊடுருவி தன்னிறமாப் போறசாரி பொன்னிறமா வாரதெப்போ. 37. வங்காளம் போகாதே கிராமத்து இளைஞகுெருவ்னுக்கு வெகு நாளாக வேலே கிடைக்க வில்லை. தந்தை குத்தகைக்குப் பயிரிடும் கிலத்தில் கிடைக்கும் சொற்ப கெல் குடும்பச் செலவுக்குப் போதாது. ஊரில் பயிரிட வேறு கிலம் கிடைக்கவில்லை. நடுவைக் காலத்திலும், அறுவடைக் காலத்திலும்தான் கூலி வேலை கிடைக்கும். ஆகவே, வேறெங்கா வது போய்ப் பிழைப்புத் தேடுவது என்று அவன் முடிவு செய்து விட்டான். வறுமையில் உழலும் அவன் குடும்பத்தாரும் அவன் முடிவை ஆதரித்தனர். அச்சேரியில் அவனேக் காதலிக்கும் இள கங்கை யொருத்தி இருந்தாள். அவன் துர்ரதேசம் செல்வதை அவள் விரும்பவில்லை. ஆனால் அவனுடைய குடும்பப் பிரச்னையை அவளால் தீர்க்க முடியுமா? பிரிவை எண்ணித் துன்பமுறும் அப் பெண் இளைஞனிடம் தன் மனவேதனையை வெளியிடுகிருள். அவன் அவளைத் தேற்றுவதற்காகச் சிங்காரக் கொண்டைக்குச் சீப்பு வாங்கிக்கொண்டு சீக்கிரமே திரும்பி வருவதாக வாக்களிக் கிருன். அவர்கள் உரையாடலே இப்பாடல்.