பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 0 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் wo பெண் : ஆசை மவம் கூசுதைய அம்புருவிப் பாயுதைய நேச மனம் கெஞ்சிலே நெருப்பு தணல் ஆகுதையா. பகளம்போல் கண்ணிரை பக்கமெல்லாம் சேரவிட்டேன் முத்துப் போல் கண்tைரை முகமெல்லாம் போரவிட்டேன். ஆண் : வங்காளம் போறதுண்ணு மனசுலேயும் எண்ண வேண்டாம் சிங்காரக் கொண்டைக் கெல்லாம் சீப்பு வாங்கி கான் வாரேன். (சேகரித்தவர்- எஸ். எஸ். போத்தையா! 38: பயமில்லை ஒடைக்கரையிலே தன் காதலனைக் கண்ட பெண்ணுெருத்தி ஒடைக்குள் இறங்கி விடுகிருள். கரை மறைவில் ஒடும் தண்ணிரி னுள் கின்று ஏதோ வேலையில் ஈடுபட்டவள்போல் கற்களைப் பொறுக்குகிருள். காதலன் நெருங்கி வந்து அவளிடம் பேச்சுக் கொடுக்கிருன். தான் அவளருகில் வருவதால்தான் அவள் பயப் படுகிருளோ? என்றெண்ணி, அவன் அவளிடமே கேட்டு விடு கிருன், அவள் அவன் வருவதற்காகப் பயப்படவில்லை என்றும், கரைமறைவில் பேசுவதற்கு ஒர் வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளவே ஒடைக்குள் இறங்கியதாகவும் கூறுகிருள். அவர்கள் உரை யாடலே இப்பாடல். ஆண் : ஒடையிலே கல் பொறுக்கி, ஒதுங்கி நின்னு போரவளே! பதறிடாமே உன் மனசு பக்கத்திலே கான் வாரேன்.