பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நமது சமுதாயத்தின் அடித்தளம் உழைக்கும் மக்கள். அவர்களது வாழ்க்கை நாடோடிப் பாடல்களில் சித்தரிக்கப்படுகிறது. அவர்களது வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நாடோடிப் பாடல்கள் சித்தரிக்கின்றன. குழந்தை கருவாக இருக்கும் காலத்தி இருந்து உலகில் தோன்றி பிள்களப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி சாகும் வரைக்கும் மனித வாழ்க்கையிலுள்ள பல்வேறு சிகழ்ச்சிகளின் படப்பிடிப்பாக நாடோடிப் பாடல்கள் உள்ளன.

குழந்தை இல்லேயே என்று ஏங்கும் மலடியின் ஏக்கத்தையும், கருவுற்று இருக்கும் காலத்தில் பிள்ளைப்பேற்றை எதிர்நோக்கி நடக்கும் சடங்குகளையும், கருவுயிர்த்த காலத்தில் தாயடையும் இன்பத்தையும், குழந்தையின் முதலாண்டு கிறையும் வரை தாய் அதனே அன்போடு தாலாட்டிச் சீராட்டுவதையும், குழந்தைகள் பிள்ளைப் பருவமெய்தி, ஒடியாடி விளையாடுவதையும், மணப்பருவம் எய்திய இளைஞர் காதல் வாழ்க்கையையும், மணமான தம்பதி களின் குடும்ப வாழ்க்கையையும், இன்னும் இவை போன்ற நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளேயும் நாடோடிப் பாடல்கள் சித்த ரிக்கின்றன. சமூக வாழ்க்கையில், உழைப்பாளி மக்கள் அனு: பவிக்கும் ஆர்வங்களேப் பொருளாகக் கொண்டுள்ள பாடல்களும் உள்ளன. உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினர் சாதிக் கொடு மைக்கு உள்ளாகின்றனர். இக் கொடுமைகளே எதிர்த்து அவர்கள் எழுப்பும் உரிமைக் குரலேயும், நாடோடிப் பாடல்களில் நாம் கேட் இருேம்.

சுருக்கமாகச் சொன்னுல் உலக வாழ்க்கையை உழைக்கும் மக்களின் கண்ளுேட்டத்தில் காட்டும் கண்ணுடி நாடோடிப் பாடல்களாகும். நாட்டுப் பாடல்களில் உழைக்கும் மக்களின்