பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பகுதி-காதல் 103 பெண் : ஓடைக்குள்ளே போனுலும் உள்ளம் பதற மாட்டேன் ! வந்தால் மனம் மகிழ்வேன் வந்திருந்தால் போதுமையா, நில்லுங்கையா கான் வாரேன் நிறுத்துங்கைய பொடி கடையை சொல்லுங்கையா உங்க செய்தி சோதிக் கிளி வாய் திறந்து. (சேகரித்தவர் எஸ். எஸ். போத்தையா) 39. சொல்வதெல்லாம் செய்வேன் கமுகு போல வரையுடைய அழகிய கம்பந்தட்டையொன்றை வில்லாக வளைத்து, விளையாட்டாக அதனைச் சுழற்றிக்கொண்டு செல்லுகிருன் ஓரிளேஞன். அதனைப் பார்த்த அவனது காதலி, அவ்வில்லைக் கொண்டு மாடப்புருத் தெறிக்கும்படி கெஞ்சுகிருள். அவள் வாய் திறந்து கேட்டுவிட்டால், வளத்தால் ஒடிந்துவிடக் கூடிய கம்பங்குச்சியும் காண்டிபமாகிவிடுமாம்; புரு மட்டுமா, மயி ஆலயும் குயிலேயும்கூட, அந்த வில்லால் தெறித்துவிடுவாளும், "காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே காற்றையும், விண்ணே யும் சாடுவோம்' என்ற பாரதியின் கருத்து இப்பாடலின் கருத்தை யொத்திருப்பதைக் காணலாம். 1. கமுகங்கம்பு வில்லெடுத்து கரை நெடுகப் போறவரே மாடப்புரு தெறிப்பாயானுல் மனமும் உண்டு உங்க மேலே. 2. மயில் தெறிப்பேன், குயில் தெறிப்பேன் மாடப்புரு நான் தெறிப்பேன் சொன்ன புரு நான் தெறிப்பேன் சோதி கிளி வாய் திறந்தால். (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா)