பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பகுதி-காதல் 105 அருப்பு மோதிரம் தந்தவனே ஆசை வார்த்தை சொன்னவனே விருப்பமில்லை உன் மேலே மேது இடம் தேடிக் கோடா. (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) (அருப்பு மோதிரம்-கொம்பு அறுத்துச் செய்த மோதிரம்) 42. காலம் கடத்துவேனே ! தேயிலைத் தோட்டத்தில் வேலே செய்யும் காதலர்களின் மறைவான சந்திப்பு வெளியாகி விடுகிறது. அவள் அவனைச் சந்திக்க அஞ்சுகிருள். அவனேக் கண்டும் காணுததுபோல் விலகிச் செல்கிருள். அவன் அவளை வழிமறித்து ஏன் பராமுக மாகப் போகிருய்?' என்று கேட்கிருள். தன் மன கிலேமையை அவள் அவனிடம் சொல்கிருள். அவன் மனம் வருந்தி இனி நான் காலம் கடத்த மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துச் செல்கிருன். ஆண் : கூடை மேல் கூடை வைத்து கொழுந்தெடுக்கப் போற புள்ளே-உன்னக் கொள் வோன் மனம் குளிர கொஞ்சம் கின்று பேசேண்டி. பெண் : அக்கம் பக்கம் பாராமல் அதிகாரமாய்ப் பேசும் மச்சான் ஆனுலும் ஆகட்டும் அடுத்த நாள் பேசிகுவேன். ஆண் : முத்துப் போல் பல்லழகி முகங் கோணுச் சொல்லழகி-என்னக் கண்டாக் கசக்குதோடி கருத்து ஒண்னு ஆன பின்னே.