பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பகுதி-சமூகம் Í J 3 யிடுகிருன் அதைக் கேட்டுக்கொண்டு வந்துவிட்ட அவள் அவன் பயத்தைப் போக்க வேருெரு பயத்தை உண்டாக்குகிருள்; முள்ளை முள்ளால் எடுப்பதுபோல. நாடு நடுங்கும் காதலனேயும் தைரியமூட்டும் காதலியையும் இப்பாடலில் நாம் சக்திக்கிருேம், ஆண் : மட்டிச்ச கொண்டைக்காரி மாங்றத்துப் பிள்ளையவ தொட்டிட்ட காள் முதலா துயரம் வந்து சேர்ந்திருமோ. பெண் : துயரம் வந்து சேர்ந்திருமே, துன்பம் வந்து கேர்ந்திருமே, பழி இழுத்துப் போட்டிருவேன், பழிகாரா உக்தன் மேலே ! சேகரித்தவர்: எஸ். எஸ். போத்தையா) 5. நொண்டி மாப்பிள்ளை உழவர்கள் ஏழைகள், ஊனே உருக்கி உழைத்தாலும் கலி யாணம் காட்சிக்குக் காசு மிஞ்சுவதில்லை. நாலேந்து பெண்களைப் பெற்று விட்டாலோ உழவன்பாடு திண்டாட்டங்தான். பருவம் வந்த பல பெண்களைப் பெற்ற தாய் தந்தையர்கள் தங்கள் பெண் களின் உணர்ச்சிகளேவிட அவர்கள் உயிரைப் பாதுகாக்கக் கூடிய கஞ்சியைத்தான் பெரிதாகக் கருதுகிருர்கள். நொண்டியாய் இருந் தாலும் கஞ்சிக்கு வழி இருந்தால், அவனுக்குப் பெண்ணேக் கைப் பிடித்துக் கொடுத்து விடுகிறர்கள். தாய் தந்தையர் துன்பம் காணச் சகிக்காத பெண்ணும் அத்திருமணத்திற்கு இசைந்து விடு ஒருள். பெற்ருேர் மனம் திருப்தி அடைகிறது. ஆனல் வாழ்க் கைப்பட்ட பெண்ணுக்கு மன அமைதி உண்டா? அவள் உள்ளக் குமுறலை இப்பாட்டில் கேளுங்கள். கஞ்சிக் கலையமென்ன நானிருந்த செல்வமென்ன ! கொண்டிக்கே வாழ்க்கைப்பட்டு நொந்த குடி ஆனேனே!