பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நான்காம் பகுதி-சமூகம் Í 1 5 அஞ்சிலென்ன மிஞ்சினது? அழகிலென்ன மீறினது ? கொஞ்ச வயதிலேயே கூடினது பொய்யாச்சே, கான் முடிஞ்சு நான் கழிச்ச கல்ல தொரு சண்பகப் பூ யார் முடிஞ்சு என்ன செய்ய-பழைய அன்பிருந்தால் போதுமைய ! சேகரித்தவர் : எஸ். எஸ். போத்திையா) சேர்ந்தவர் பிரிந்தனர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கமது சமூகத்தில் சமநீதியில்லே. பெண்களுக்குக் கடுமையான கற்பு விதிகளும், ஆண்களுக்குக் நெகிழ்வான ஒழுக்க முறைமைகளும் உள்ள சமுதாயம் தமது முதாயம். இந்த முறையைக் கண்டித்துப் பாரதியும். ' கற்பு கிலேயென்று யே வந்த ! அதை இரு கட்சிக் டும் 1ெ து வில் வைப்போம்.' என்று பாடினும் இந்நாட்டுப் பாடல் மணமாகி இன்பமாக வாழ்ந்த மனேவி கணவனின் ஒழுக்கக் கேட்டால் உள்ளம் உருகி வாடுவதை சித்தரிக்கிறது. அவன் தனது தனிமையைப் பல ாடருவங்களால் விளக்குகிருள். கலங்கிய கண்மாய்த் தண்ணீர், ஒத்தை வண்டி மாடு முக்காணிக் குச்சி முதலிய உவமைகள் மூலம் தனது தனிமையைப் புலப்படுத்துகிருள். அவளது ஏக்கமும் தனிமை உணர்வும் இப்பாடலில் வெளியாகின்றன. ஒழுக்க முறையில் சமநீதியின்மையை இப்பாடல் சுட்டிக் காட்டுகிறது. சேர்ந்து இருந்தமையா சேலத்துக் கெண்டை போல காரை வந்து மீனத் தொட கைந்ததையா கம்முறவு.