பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பகுதி-சமூகம் 12} சேர்ந்து கொண்டு சண்டைகளை மூட்டி விடுவார்கள்; கிராமத்தார் களும் இவர்களே நம்பி இரண்டு பட்டிருப்பார்கள். இத்தகைய வாயாடி ஒருவன இப்பாட்டு நமக்கு அறிமுகம் செய்து வைக் கிறது. இக்கிராமம் ஒரு ஜமீன் கிராமம். ஜமீன்தாரைத் தெரியும் என்று சொல்லி குழந்தைசாமி என்ற வாயாடி அடிக்கடி ஜமீன்தார் இருக்கும் எட்டையபுரம் போய் வருவான். அவரைக் கண்டதாகவும், அவர் தன் சொல்படி கேட்பார் என்றும் ஊரில் வந்து புளுகுவான். அவன் ஊரிலுள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றில் சேர்ந்து கொண்டான். அவன் சேர்ந்து கொண்ட கட்சியிலுள்ளவர்கள், அவன் பேசில்ை கோர்ட்டிலுள்ள வக்கீல் களெல்லாம் வாயடைத்துப் போய் விடுவார்கள்' என்று பேசிக் கொள்ளுகிருர்கள். வாயாடி வக்கில்களைவிட குழந்தைசாமி பெரிய வாயாடி என்பது அவர்களுடைய கருத்து. இந்த வாயாடி தங்களுடைய கட்சியிலிருப்பதால் தங்களுக்கு வெற்றி கிடைக்கு மென்று அவர்கள் நம்புகிருர்கள். ஒன்று பட்டாலுண்டு வாழ்வு' என்ற பாரதியின் வாக்கை அறியாதவர்கள் அக்கிராம மக்கள் இவனத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டதால் அவர்கள் என்ன பாடுபடப் போகி ரர்களோ ? பட்டபிறகல்லவா அது தெரியும்? அரக்கு லேஞ்சி வரிஞ்சி கட்டி அரமனையில் உட்புகுந்து கோடடைச்சு வார்த்தை சொல்லும் குழந்தை சாமி கம்ம பக்கம். (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) 14. சாதிக் கலகம் சாதிப் பூசல்களினல் பல கலகங்கள் விளகின்றன. நாடார் மறவர் கலகங்கள் பல தோன் றி உழைக்கும் மக்களின் ஒற்றுமை யைச் சிதைப்பதுண்டு. இவை அவ்வச்சாதிகளிலுள்ள பணக்காரர்களால் தூண்டிவிடப்படும். இக்கலகங்கள் கியாய மற்றவை. ஒரு பாவமுமறியாத குழந்தைகள்கூட அவற்ருல் சாகின்றன என்ற கருத்தைக் கொண்டுள்ளது இப்பாடல்.