பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பகுதி-குடும்பப் பிரச்சினை 13.1 இளைஞன் : கரும்பு நிறத் தழகி(யை) காயாம்பூ மேனியாளே இடை சிறுத்த செண்பகப்பூ(வை) என்ன சொன்ன தாயாரே. தாய் : அரிசி அரிச்சிப் போட்டு அடுத்த வீடு போயிருந்தா சோறு குழைந்த திண்ணு சொன்ன னப்பா ஒரு வார்த்தை. இளைஞன் : இன்றைக்குச் சொன்னது போல் இனிமேலும் சொன்னயானுல் கண்ணி கரை பயித்தை கெடு நாளும் பின்னிடுவேன். குறிப்பு : சொன்ன-சொன்னுய்; குச்சி-குச்சில். சேகரித்தவர்கள்-கார்க்கி, எஸ். எஸ். போத்தையா! 5. கிளி பறந்தது! அவள் வளர்த்த பச்சைக்கிளி, அவள் கணவன்தான். கூட்டை விட்டுத் திறந்து வெளியே விட்டதும் பச்சை மரத்திற்குப் பறந்து செல்லும் கிளியைப்போல் அவன் வேருெருத்தியிடம் 'சென்று விட்டான். அவளுடைய பேச்சும் அவனுடைய பதிலும் இப்பாடலில் காணப்படுகின்றன. - . . . . . கணவன் : கிளியோ கிளி பார்ப்பேன் கிளி முகத்தை நான் பார்ப்பேன் வேத்துக் கிளி பார்த்ததுன்னு விலங்கடிச்சிப் போட்டிடுவேன். 4p&rad: வேத்துக் கினி பார்த்தா என்ன விலங்கடிச்சிப் போட்டான்ன கோழிக் குஞ்சு ருபங்கொண்டு } குதிச் சோடிகான் போவேன்.