பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பகுதி-குடும்பப் பிரச்சினை 133 வண்டிக்காரன் பதில் : அச்சு ஒடிஞ்ச வண்டி ஆரக்கால் போன வண்டி பட்டை கழன்ற வண்டி பட்டுக் கிட்டான் உன்புருஷன், சேகரித்தவர்:- எஸ். எஸ். போத்தையா) 7. கப்பல் கவிழ்ந்தது கடற்கரையில் செம்படவர் குடிசைகள். குடிசையிலிருந்து வெளியே வந்து கடற்கரையில் காத்திருக்கிருள் பரதவர் மகள் அவள் கணவன் கபப்ல் சென்று பல நாட்களாயின. திரும்பி வரும் நாள் ஆகிவிட்டது. நாள்தோறும் அவள் கடற்கரையில் காத்திருக்கிருள். அவன் படகு திரும்பவில்லை. அவனேப்பற்றி அவள் மனத்தில் ஒரு சித்திரம் எழுந்தது. அவன் அவள் காணுத தொலைவில் இறங்கிலுைம் அங்கிருந்தே விசிலடிப்பான். அது தூத்துக்குடி முழுதும் கேட்குமாம். அவன் வருகையைத் தெரி விக்கும் அவ்வொலி அவள் பல நாட்கள் எதிர்பார்த்து ஏங்கியும் கேட்கவில்லை. கப்பல் கவிழ்ந்து விட்டதோ என அவள் பயப்படு கிருள். கப்பல் கவிழ்ந்து விட்டால் கடற்கரையில் அவளுக்கு ஆசை ஏன்? அவளுக்கு நேரமாகி விட்டது. இரவில் அவன் வக் தால் என்ன செய்வது? அவள் தன் வீட்டின் அடையாளத்தைக் காற்றினிடம் சொல்லி வைக்கிருள். அவனுக்கு வீட்டின் அடை யாளம் தெரியும், ஆயினும் தன் பயத்தில் காற்றிடம் சேதி சொல்கிருள். - - எல்லோரும் உசுடிலச்சா, காதுருட்டும், கண்ணுருட்டும் ! என் சாமி உசுலடிச்சா, துத்துக்குடி குள் பறக்கும்!