பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பகுதி-குடும்பப் பிரச்சினை 135 தென்னங்கிடுகிலேயே தேன்வடியும் மெத்தையிலே மன்னன் கொடங்கையிலே மத்தொருத்தி சாயலாமோ? தெற்குத் தெருவிலேயோ தேத வேதப் பொட்டுக்காரா; வடக்குத் தெருப்பிள்ளையாலே வகை மோசம் வந்துரும்! கீழத் தெருவிலேயோ கிளிமூக்குச் செஞ் சேவல் குத்தனுமீண்னு சொல்லி கூடி மாடிப் பேசுருங்க! மாவு உருண்டை போல மனியுருண்டை இங்கிருக்க; சாணியுருண்டைக்காக சாம வழி போகலாமோ? (தேதவேதப் பொட்டு-என்னவென்று விளங்கவில்லை. பிள்ளை-பெண் இது நெல்லை மாவட்ட வழக்கு.) (சேகரித்தவர்-எஸ். எஸ். போத்தையா}