பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரும் பகுதி-ஊரும் நாடும் 145 இது வள்ளுவர் வாக்கு. பொட்டை காழி போட்டு அளக்கா மல் பூவரசங் கொப்பிகுல் நல்ல மரக்கால் உண்டு பண்ணிரைாம் எட்டையபுரம் மகாராசா. அவர் இறந்து போனபோது உழவர் கள் பாடிய இரங்கற் பாவே இப்பாடல். கார்த்திகை மாத்தையிலே கடலேக் கண் கட்டயிலே மார்கழி மாத்தையிலே மாண்டாரே மகாராஜா. யார் வந்தாலும் கூப்பிட்டாலும் போக மாட்டார் மகாராசா யமன் வந்து கூப்பிட்டதும் ஏறிவிட்டார் பூந் தேரில். பூவரசங் கப்பு வெட்டி புது மரக்கால் உண்டு பண்ணி நித்த கித்தம் படியளக்கும் வள்ளத்தையா மகாராசா. ஆடு அழுக! மாடு அழுக! ஆயிரம் சனம் அழுக, பட்டத்து யான யெல்லாம் பாதையிலே நின்றழுக. s குறிப்பு-இப்பாடல் கோவில்பட்டி வட்டாரத்தில் பாடப் படுகிறது. எட்டையபுரம், கோவில்பட்டிக் கருகில் இருப்பதால் இப்பாடல் அங்கு பாடப்படுவதில் வியப்பெதுவும் இல்லை. ஆனல் திருநெல்வேலிக் கருகில் உள்ள நன்செய் நிலச் சிற்றுார்களிலும் இப்பாடல் பாடப்படுகிறது. அதுதான் வியப்புக்குரியது. ஏன்? அவர் தன்னுடைய சமஸ்தானத்தில் கள்ள மரக்காலப் போக்கி கல்ல மரக்கால் உண்டுபண்ணிய செய்தி வெளியிலும் பரவிற்று. 10