பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 தமிழ் காட்டுப் பாமரர் பாடல்கள் வண்ணுத்தி: வெளுத்து வெளுத்துப் பார்த்தேன் வெள்ளவி வைச்சுப் பார்த்தேன் யாரு முகம் பார்த்தியளோ! அழுக்கு முற்றும் போவதில்லை, 4. மாமன் வந்த வேளை ஊரிலே தேர்த் திருவிழா, பக்கத்துக் கிராமத்திலிருந்து இளைஞனொருவன் தனது சகோதரியையும், அவளது குழந்தை களேயும் பார்க்க வருகிருன். அவன் அக்கா வீட்டையடைந்ததும் வாசலில் அவளுடைய குழந்தை அவனே வரவேற்கிறது. மாமா வைக் கண்ட மகிழ்ச்சியில் அது ஒரு நீண்ட வரவேற்புரை நிகழ்த்து கிறது. அக்குழந்தையின் பேச்சே இப்பாடலாக அமைகிறது. வாங்க மாமா, வாங்க ; நீங்கவந்த வேளை கம்பஞ் சோறு கரு வாட்டுக் குழம்பு ! தின்னுபாருங்க மாமா தேரு பார்க்கப் போவோம் காசுதாங்க மாமா கடலே வாங்கித் தின்போம். (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) 5. கால மாறுதல் ஒரு ஜமீன் கிராமம். ஒரு கிறவன் தன் ஆயுள் காலத்தில் கிராமத்தில் நடந்த மாறுதலே எண்ணிப் பார்த்தான். இரண்டு பஞ்சங்கள் வந்தன. ஊரில் பலர் மலைத் தோட்டங்களுக்குச் சென்றுவிட்டனர். கிலமுடையவர்கள் கிலங்களே விற்றனர். தங்க நகையுடையவர்கள் அவற்றை விற்றனர். உழைப்போர் வாழ்க்கை முன்னிலும் மோசமாயிற்று. ஆளுல் இவ்வளவு மாறுதல்களிலும் சுகமாக வாழ்ந்தவர் ஒருவர் உண்டு. அவரைப் பஞ்சம் பாதிக்க