பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பகுதி-பல் சுவை 153 வில்ல, கிழவனுடைய இளமைக் காலத்தில் பெரிய ஜமீன்தார் வாழ்ந்திருந்தார். அவர் பேய்க் குதிரைமேல் சவாரி செய்தார், அவருடைய மகன் இப்பொழுது ஜமீன்தார். இவர் பெரிய காரில் #ುಗಿ செய்கிருர். பஞ்ச காலத்தில் உழவர்கள் விற்ற நிலமெல் லாம் இன்று இவருக்குச் சொக்தம். காலம் மாறித்தான்விட்டது. ஏழையை மேலும் ஏழையாக்கிவிட்டது. பணமுள்ளவனே மேலும் பணமுள்ளவனுக்கி விட்டது. கால மாறுதலின் ஒரு அம்சத்தைத் குறிப்பிட்டு இப்பாடல் கிராமப்புறத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் முழுவதையும் சுட்டிக் காட்டுகிறது. பெரிய துரை காலத்திலே பேய்க் குதிரை சவாரி; சின்னத் துரை காலத்திலே சிம்மம் போலே மேர்ட்டார். - (சேகரித்தவர்-எஸ். எஸ். போத்தையா) 6. ஊர்க்குருவி வெகு நேரடாகத் தாய்ப் பறவையைக் காணவில்லை. சிறிய குஞ்சு பெரிய குஞ்சினிடம் அம்மா எங்கே போளுள் ? என்று கேட் கிறது. பெரிய குஞ்சு அம்மாவுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என தான் கினைக்கிறதோ அதனைச் சொல்லுகிறது. - தங்கை : அக்கா அக்கா ர்க் குருவி ஆத்தா எங்கே போனு ? அக்காள் : យ អា រឺ : பட்டிருப்பாள் இக்கேரம் ! வெள்ளிக் கோல் தட்டிலே விலையிருப்பாள் இந்நேரம் ! அரிவாள் மனேயிலே அரிந்திருப்பாள் இந்நேரம் ! குயவனுர் சட்டியிலே கொதிச்சிகுப்பாள் இந்நேரம்!