பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் ஏழு புளிய மரம் எதுக்க ரெண்டு பூத்த மரம் பூத்த மரத்தடியில் பேசர் விசயன் காவல் கட்டு. சாவல் பறக்குதில்லை சமுதாடு நிற்குதில்லை கடுக்கன் துவளுதில்லை கட்டழகன் தன்னி, கு. எல்லார் ஹரிலேயும் எருதுகட்டு, சாவற்கட்டு காதியத்த இந்த ஊரில் நாயோடு மல்லுக் கட்டு. (சேகரித்தவர்: எஸ். எஸ். போத்தையா) 9. ரயில் வண்டி மண்ணே வெட்டி வண்டியில் கொண்டு செல்லும் வண்டிக் காரன் ஒருவன், மண்ணெடுத்துச் செல்லும் குட்ஸ் வண்டியைப் பார்க்கிருன். தன் வண்டிக்கு ஒரு மரச்சட்டமென்ருல், ரயில் வண்டிக்கு ஆறு சட்டமிருக்கிறது. இப்படி ஆறு சட்ட வண்டி நூறு வண்டிகளைக் கோர்த்து மண்அள்ளிப் போட்டு ஒட்டிக் கொண்டு செல்லுகிருன் ஒரு மனிதன் 1 ரயில் வண்டி செய்யும் வேலையின் அளவையும், அதை ஒட்டிச் செல்லும் மனிதனின் பெருமையையும் பார்த்து கிராமத்து வண்டிக்கான் வியப்பில் மூழ்குகிருன். ரயிலக் கிண்' என்று ஒட்டுபவன் தன்னைப்போல் ஒரு தொழிலாளி தானே என்று பெருமை யடைகிருன். ஆறு சட்டம் நூறு வண்டி அம்பத்தாறு ரயில் வண்டி கங்கை கொண்டான் மண்ணெடுத்து கிண்ணுது பார் ரயில் வண்டி !