பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பகுதி-பல் சுவை 157 10. பாட்டுக்காரன் கிராமங்களில் நல்ல சாரத்தோடு பாடுபவர்களுக்குச் சிறந்த மதிப்பு உண்டு. கீழ்வரும் காட்டுப் பாடலில் முதற் பகுதியில் பாட்டுக்காரனது மனைவி தனது கணவனின் பாட்டுத் திறத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிருள். அதைக் கேட்ட அவளும் டைய அண்ணன் நீ பாட்டைத்தான் கேட்கிருயா? அல்லது அவனத்தான் பார்க்கிருயா ? என்று சொல்லிக் கேலி செய்கிருன், இக்கேலிப் பேச்சு காதில் விழாததுபோல் அவள் தன் கணவன் பெருமையை மீண்டும் பேசுகிருள். அவன் தொண்டை கட்டி விடாமல் இருப்பதற்காகச் சுக்குத் தண்ணிர் போட்டு வைத்திருப் பதையும் அண்ணனிடம் சொல்லுகிருள். தங்கையின் இல்லற இன்பத்தை எண்ணி அண்ணன் மகிழ்ச்சியடைகிருன். அவர்கள் இருவரது உரையாடலே இப்பாடல். தங்கை: 1ல் பீசு வேட்டி கட்டி மத்தாளம் கையிலெடுத்து விருத்தங்கள் சொல்லி வந்தா வீதி இடம் கொள்ளாதே. அண்ணன் : அஞ்சாறு வீட்டுக் குள்ளே அவனுெருத்தன் பாட்டுக்காரன் பாட்டைத்தான் கேட்பாளோ பயtலத்தான் பார்ப்பாளோ ! தங்கை : ஆசாரி மடத்து மேலே அதிகர் சத்தம் 1ாமிச் சத்தம் தொண்டையும் கம்மிராம சுக்குத் தண்ன போட்டுத் தாரேன். |சேகரித்தவர் : எஸ்.எஸ். .ே (கம்பிராம-கம்மி விடாமல். அதாவது குரல் விடாமலிருக்கட்டும்.)