பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் களில் இத்தகைய பல வீரர்களின் கதைகளை நாம் கேட்கிருேம். முத்துப்பட்டன்.கதை, உழைக்கும் மக்கள் வீரன் எனக் கருதும் ஒருஆலுடைய கதை, அவன் தனது குல உயர்வைக் காதலுக் கற்கத்தியாகம் செய்கிருன், உழைக்கும் மக்களோடு தானும் క్షక్షీ , ప్లీ ஒன்றிவிட்ட்ான். அவர்களது இன்ப துன்பங்களைத் தன்னுடைய தீர்க்கிக் கொண்டான். உjவர் மக்களது மாட்டு மந்தையைப் பாதுகாக்க உயிர் கொடுத் தான். இவ்வீரனை உழைக்கும் மக்கள் வினேவில் சிறுத்தி கோயில் கட்டி வணங்கினர்கள். இவனைப் போலவே இன்னும் பல வீரர்களுடைய கதைகளே வில்லுப் பாட்டுகள் கூறுகின்றன. ஒவ்வொரு வேளை உடைமை வர்க்கத் தில் பிறந்தவர்கள் அதன் சட்ட திட்டங்களை மீறும் பொழுது அதன் கொடுமைக்கு ஆளாகி, உயிர் துறப்பதும் உண்டு. இத்தகைய வீரஞெருவனின் கதையைச் சின்ன நாடான் கதை கூறுகிறது. ஐந்து சகோதரர்கள் குடும்பத்தில் ஒரே மகன் பிறக் தான். அவன் தான் சின்ன காடான். அவன் இளைஞஞைன். அவனுக்குத் தங்கள் ஒரே சகோதரியின் ஒரே மகளைத் தந்தை மணமுடித்து வைத்தான். அவள் சிறு குழந்தை. சொத்துரிமை யைப் பாதுகாக்க இத்திருமணம் சிறைவேற்றி வைக்கப்பட்டது. பருவத்தில் ஒத்திராத கணவனும், மனவியும், இல்லறம் நடத்த முடியவில்லை. சின்ன நாடான் வேற்றுச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணேக் காதலித்து அவளோடு சேர்ந்து வாழத் தொடங்கி மூன். அவன் தாலி கட்டிய மனேவி பருவமெய்தும்வரை அவனது நடத்தை குறித்து அவனுடைய பெற்றேர்கள் கவலைப்படவில்லை. பின்னர் அவனே மனேவியோடு சேர்ந்து வாழ அழைத்தனர். அவன் முறுத்தான். பெற்ருேர் பன்முறை மன்ருடிப் பார்த்தனர். அவன் தன் காதலியைக் கைவிட மறுத்தான். அவர்கள் அரச னிடம் முறையிட்டுப் பார்த்தார்கள். சின்ன நாடான் மன்னனே யும் எதிர்க்கத் துணிந்தான். மன்னன் தந்தையிடம் மனம்போல் சின்ன நாடாகீனத் தண்டிக்க உத்தரவிட்டான். தக்தையும் சிற்றப்பன்மாரும் ஆயுதம் தாங்கி சின்ன நாடான் தனித்திருக்கும் சமயம் அவன் வீட்டினுள் நுழைந்து அவனே இழுத்து வந்து கொலை செய்துவிட்டனர். சொத்துரிமைச்கு சொந்த மனேவியிடம் குழந்தை பிறக்க வேண்டுமென்பது சமூகச் சட்டம். இச்சட்