பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் ணிக்கின்றன. வெள்ளைக்காரர்களுடைய கண்னேட்டத்தில் மருது அப்படித்தான் தென்பட்டிருக்கவேண்டும். ஆனல் காடோ டிப் பாடல்களிலோ, மருது வெள்ளேயரை எதிர்த்த வீரஞகவும், சிறந்த நண்பனுகவும், நம்பினவர்களுக்கு உயிர் கொடுக்கும் பெருக் தகைமை உடையவனுகவும், மக்களுடைய அன்பிற்குரியவனுகவும் காட்சி அளிக்கிருன். தமிழ் மக்கள் சண்னேட்டத்தில் மருதுவின் சித்திரத்தை நாடோடிப் பாடல்கள் வரைந்து காட்டுகின்றன. இதுபோலவே கட்டபொம்முவைப் பற்றியும் ஏராளமான காடோடிப் பாடல்கள் உள்ளன. அவனுடைய சரித்திரத்தை உண்மை வழுவாமல் சொல்லும் கதைப் பாடல்கள் உள்ளன. அவ அடைய தவறுகளைச் சுட்டிக்காட்டும் தனி நாட்டுப் பாடல்களும் பல உள்ளன. இவை அனைத்தையும் தொகுத்தால் கட்டபொம்மு வைப் பற்றி உண்மையான வரலாற்றுச் சித்திரத்தை காம் திட்டமுடியும். இதுபோலவே, ஊமைத்துரையைப் பற்றியும் ஏராளமான காட்டுப் பாடல்களும், நாடோடிக் கதைகளும் வழங்கு கின்றன. பூலுத் தேவரைப் பற்றியும், பூலுத் தேவர் சிந்து, பொலிப்பாட்டு, முதலிய நாட்டுப் பாடல்கள், புளியங்குடி, வாசு தேவ கல்லூர், நெற்கட்டும் செவல் முதலிய ஊர்களில் வழங்கி வருகின்றன என்று அறிகிறேன். அவை அனைத்தும் தொகுக்கப் படுமானல் வெள்ளைக்காரர்கள் அவனைப் பற்றித் தீட்டியுள்ள சித்திரத்திற்கும், தமிழ்வாணன் திட்டியுள்ள சித்திரத்திற்கும் மாறுபட்ட உண்மையான வாலாற்றுச் சித்திரமொன்றை நாம் தீட்டிமுடியும். இவ்வாறு சரித்திர கிகழ்ச்சிகளை மக்கள் கண் னேட்டததில் சித்திரமாகத் தீட்டிக்காட்டும் கதைப் பாடல்கள் பல இடங்களில் வழங்கிவரலாம். அவற்றைத் தொகுக்கும் முயற்சி ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்படவேண்டும். இன்றும் நமது சமூகத்தில் தீர்க்கப்படாத சில பிரச்னைகண் அடிப்படையாகக் கொண்ட கதைகளையும் நாம் நாட்டுப் பாடல் வடிவத்தில் காண்கிருேம் உதாரணமாக நல்லதங்காள் கதையை எடுத்துக்கொள்ளுவோம். பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத தால் ஏற்படும் விகளவுகளை நல்லதங்காள் கதை சுட் டிக்காட்டு கிறது. அவள் தண்ணீர் ஊற்றி வளர்த்த தோட்டத்தில் ஒரு மாம் பழம்பேறிக்கக்கூட அவள் குழந்ைதகளுக்கு உரிமை இல்லாமற்.