பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 9 போய்விடுகிறது. அவள் தன் தகப்பகுேடும், அண்ணகுேடும் சேர்ந்து உழைத்து வளர்த்த தோட்டம் அண்ணனுக்கும் அண் ணன் மனேவிக்கும் உரிமையாகிவிடுகிறது. அண்ணன் மிகவும் கல்லவனுக இருந்தும், பஞ்ச காலத்தில் சில நாட்கள் அண்ணன் வீட்டில் தங்கவதே கல்லதங்காளே அண்ணன் மனைவி, மூளி அலங் காரி படாதபாடுபடுத்தி வைக்கிருள். பிறந்த வீட்டில் எவ்வித உரிமையும் இல்லே என்பதை நல்ல தங்காள் உணருகிருள். நல்ல தங்காள்மீது நமக்குத் தோன்றும் அனுதாபம் பெண்ணினத்திற் குச் சொத்துரிமை வேண்டும் என்ற உணர்வையும், உண்டாக்கு கிறது. இவ்வாறு உழைக்கும் மக்களது வாழ்க்கை முழுவதையும் பிரதிபலித்து அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டும் நாட்டுப் பாடல்கள் முழுவதும் முறையாக தொகுக்கப் படவில்லை. அவை முழுவதும் தொகுக்கப்பட்டு முறையான ஆராய்ச்சி நடத்தப்படவேண்டும். இப்பொறுப்பை தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும், சமீபத்தில் சென்னை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் நாடோடிக் கலை ஆராய்ச்சிக் குழுவினரும் முக்கியமாக மேற்கொள்ளவேண்டும். தமிழ் எழுத்தாளர்களுக்கும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும் இப்பணியில் பொறுப்புண்டு. இப்பணி கிறைவேற்றப்பட்டாலன்றி தமிழ் காட்டின் பண் பாட்டை நாம் முழுமையாக உணர்ந்தவர்கள் ஆகமாட்டோம். இத்துறையின் சிற்சில பிரிவுகளில் சில எழுத்தாளரும், ஆராய்ச்சி யாளர்களும் கவனம் செலுத்தி வருவது வரவேற்கத்தக்கது. பல்கலைக் கழகங்களும், அரசாங்கமும் தமிழ் எழுத்தாளர்களும்: வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், நாட்டுப் பாடல்களிலும், நாடோடிக் கலைகளிலும் வருங்காலத்தில் அதிகக் கவனம் செலுத்துவார்களென்று நான் கம்புகிறேன். இத்தொகுப்புைப் பற்றி நாடோடிப் பாடல் தொகுப்புகள் சில கடந்த ஒகந்து ஆண்டுகளில் வெளியாகி உள்ளன. அவற்றிள் முக்கியம்iன்வை காடோடி இலக்கியம். காற்றிலே மிதந்த கவில் லே எழுதாத கவிதைகள், தாலாட்டு, முதலியன. இ 1്