பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை Í i சுள்ளி பொறுக்கி வருவார்கள். அவர்கள் பாடும் பாடல்கள் சில வும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, சாதிக்கலவரத்தைப் பற்றி ஒரு பாடல் இத்தொகுப்பில் உள்ளது. அது கழுகு மலேயில் நடந்த கலவரம் ஒன்றைக் குறிப்பிடுகிறது. முத்துப் பட்டனேப் பற்றிய பாடலென்று முத்துப் பட்டன் வில்லுப் பாட்டிலிருந்து எடுக்கப்பட்டது. மருதுவைப் பற்றிய பாடல் ந. சஞ்சீவி எழுதிய மகுதிருவர் என்ற நூலில் கர்ணப்படு வது. பெரும்பாலான பாடல்கள் விளாத்திகுளம் வட்டாரத்தில் பாடப்படுவனவே. இப்பாடல்களில் மிகப் பெரும்பாலானவற்றை எஸ். எஸ். போத்தையா சேகரித்து எனக்கு அனுப்பினர். ஆனல் அவை வரி சைக் கிரமமா இல்லாமல் ஒருபாட்டு முதலிலும், அதற்கு அடுத்து வரவேண்டிய பாட்டு பல பாடல்களுக்கப்பாலும் காணப்பட்டன. ஒரே தலைப்பில் வரவேண்டிய பாடல்கள், பல் பகுதிகளில் சிதறிக் காணப்பட்டன. பாடல்களின் கருத்தையும் சந்த அமைப்பையும் நோக்கி அவை முறைப்படுத்தப்பட்டுள்ளன. சிவகிரி பகுதியைப் பற்றிய பாடல்கள், வில்லுப்பாட்டுக் கலை ஞர் எஸ். எம். கார்க்கி சேகரித்து அளித்தவை. இரண்டொரு பாடல்கள் தோழர் ஆர். கே. நல்லகண்ணு எழுதியனுப்பியவை. கீரை விதைக்கலாம்' என்ற பாட்டு டாக்டர் பி. ராமச்சக் திரன் உதவியது. தாலாட்டுப் பாடல்கள் எனது தாயாரும், ரீமதி தேவகி அம்மாளும் பாடக்கேட்டு எழுதியவை. இப்பாடல்கள் அனைத்தும் ஒரு மாவட்டத்தின் ஒரு சிறு பகுதியில் பாடப்படுவன என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமி முகத்தின் பல பகுதிகளிலும் பாடப்படும் பாடல்களைத் தொகுக்க முயன்ருல் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும். கிராமப் புறங்களில் வேலைசெய்யும் ஆசிரியர்களும், விவசாயிகள் சங்கங் களில் பணிபுரியும் ஊழியர்களும் சமூக சேவைகளில் ஈடுபட் டுள்ள ஊழியர்களும் சமூக கல்வி அமைப்பாளர்களும் நாட்டுப்