பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் பாடல்களச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். கிடைக்கும் பாடல்களே எனக்கனுப்பி வைத்தால் அடுத்த தொகுப்புகளில் சேர்த்துக்கொள்ள உதவியா யிருக்கும். பாடல்களைச் சேகரிக்கும் வேலையில் சலியாது முயன்ற எனது பழைய மாணவர் தங்கம்மாள்புரம் போத்தையா எனது பாராட்டுதலுக்கும், நன்றிக்கும் உரியவர் ஆவார். முன்னல் குறிப்பிட்ட பாடல்கள் அனுப்பிய தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இம்முயற்சியில் என்னை ஈடுபடுத்திய இரு தோழர்களைப் பற்றி கான் குறிப்பிடவேண்டும். ஒருவர் பூர்ணசந்திர ஜோஷி. அவர் காம் வெளியிடவிருக்கும் இந்திய நாடோடிப் பாடல்கள் என்ற நூலில் சேர்த்துக் கொள்ளுவதற்காக தமிழ்ப் பாடல்கள் சேகரித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பவேண்டினர். அதற்காக் அவர் என்னைச் சந்தித்தபோது நாடோடிப் பாடல் களின் அருமையை எனக்கு உணர்த்தி, இத் துறையில் ஈடுபட ஆர்வமுண்டாக்கினர். பலமுறை, பாடல்களைச் சேகரிக்க முயன்று சோர்வுற்றபோது சோர்வைப்போக்கி இத்துறையில் தொடர்ந்து ஈடுபடுமாறு தூண்டிய மற்ருெரு தோழர். ப. மாணிக்கம் ஆவார். அவருடைய விமர்சனங்கள் பல இந்நூல் உருப்பெறப் பெரிதும் உதவியாக இருந்தன. அவர்களிருவருக்கும் எனது நன்றி. இப்பாடல்களைப் பன்முறை திருத்தவும், வரிசைப்படுத்தவும், தலைப்புகள் தயாரிக்கவும், பிரதி செய்யவும் சலிப்பில்லாமல் உத விய குமாரி T. மங்கைக்கு எனது ஆசியும், நன்றியும் உரித்து. வாசகர்கள், தங்கள் பகுதியில் வழங்கும் நாடோடிப் பாடல் களேச் சேகரித்து அனுப்புவார்களானல், நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனுக இருப்பேன். திருநெல்வேலி, ಕ್ಲ ாகா. வானமாமலை.