பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் خلیج حتیجهایی چخچه همه چیخ 1. குழந்தை குழந்தை முதலில் கேட்கும் இனிய ஒலி தாலாட்டுப் பாட லாகும். தாலாட்டுப் பாட்டின் இனிமை கருதி கவிஞர்களும் அவற்றைக் கையாண்டு வந்தார்கள். பெரியாழ்வாரும் பிற்காலப் பிள்ளைத் தமிழ் ஆசிரியர்களும், தெய்வக் குழந்தைமீது தாலாட்டுப் பாடல்கள் பாடியுள்ளார்கள். தாய் பாடும் தாலாட்டுப் பாட்டின் கருத்து அக் குழந்தையின் குடும்பத்தின் செல்வ கிலேக்கு ஏற்ருற் போல் வேறுபடும். கிலச்சுவான்களின் குடும்பத்தில் குழந்தையை ராஜ்யம் ஆள வக்தவன் என்றும். உலக இன்பத்திற்கெல்லாம் உரிமை உடையவனென்றும் பாடல் வருணிக்கும். உழைக்கும் மக் களின் குடும்பத்தினர் 'எங்கள் துன்பத்தைப் பங்கிட்டுக்கொள்ள ஏன் வந்தாய்?" என்று தாய் பாடுவாள். தாலாட்டில் குடும்பத் தொழில்களுக்கு ஏற்ற முறையில் குழந்தையின் வருங்காலத்தைக் கற்பனை செய்து அமைத்துப் பாடுவார்கள். இத்தொகுப்பில் நிலச்சுவான் வீட்டுக் குழந்தையைத் தாலாட்டும் பாடல்களும் பூத் தொழில் செய்யும் ஒரு தொழிலாளியின் குழந்தையின் தாலாட்டுப் பாடலும் சேர்க்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களில் தாய்மார் கானும் கனவுகளின் வேறுபாடுகள் இப்பாடல்களில் காணலாம்.