பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 6. பிள்ளைக் கலிதீர்த்த பெருமான் பொன்னே நவமணியே பூலோக சுந்தரமே ! தவத்தினுல் வந்துதித்த தற்பரனே கண்ணுறங்கு! எங்கள் செல்வக் கொடி தனக்கு இளவரசாய் வந்துதித்த சிங்கப் பெருமானே செல்வனே கண்ணுறங்கு ! மலடன் மலடி என்று வையகத்தோர் பேசாமல் பிள்ளைக் கல் தாக்கவந்த பெருமானே கண்ணுறங்கு. ! 7. கண் நோக்கு அழகான குழந்தைகளேயோ, அல்லது துறு துறுப்பான குழந் தைகளையோ அயலார் பார்த்து மெச்சில்ை அவர்கள் கண்பட்டு நோய் வந்துவிடும் என்ற நம்பிக்கை பல நாடுகளிலும் உண்டு. கண் படாமல் முன்கூட்டியே தடுத்துவிடக் குழந்தையின் கன்னத் தில் சிறிது மையைப் பூசுவார்கள். பாரசீக நாட்டில் குழந்தை பிறந்தவுடனேயே, கண்படாமல் தடுக்க முகத்தில் சிறு காய மொன்று ஏற்படுத்திவிடுவார்கள். இவை தவிர வேறு பல வழக் கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. குழந்தைக்கு நோய் வந்தால் மிளகாய் வத்தலேயும், உப்பையும் குழந்தையின் தலையைச் சுற்றி வெகுதூரம் சென்று எறிவதும் உண்டு. மஞ்சள் நீரையும் சுன்னும்பையும் கரைத்து அதில் வேப்பிலக் கொழுந்தையும், ಆಕೆನ್ಸಿ போட்டு ஆரத்தி சுற்றுவார்கள். இம்முறைகளால் பிறர் கண்பட்டுத் குழந்தைக்கு நோய் விழுவதைத் தடுத்துவிடலாம் என்று நம்புஇருந்துள். இம்முறைகளைத் திட்டிக் கழிப்பு என்று சொல்வார்கள். திருஷ்டி சுத்தும்பொழுது குழந்தையின் தாயோ