பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளேயாட்டு 21 அல்லது பாட்டியோ இப்பாடலேப் போன்றதொரு பாட்டைப் பாடுவார்கள். கண்ணு)ன கண்ணுர்க்குக் கண் கோக்கும் வாராமல் சுண்ணும்பு மஞ்சளும் சுற்றி எறி கண்ணுர்க்கு. வேப்பிலயும் மஞ்சளுமாய் வீசி எறி கண்ணுர்க்கு. குறிப்பு: உடலமைப்பையும், கோயின் தன்மையையும் அறி யாத காலத்தில் மந்திரத்தால் நோயைத் தடுத்துவிடலாம் என்ற கம்பிக்கை உலக முழுவதிலும் இருந்தது. இயற்கையைத் திங்க ளுக்கு அடங்கி கடக்க மந்திரமும், மந்திரப் பாட்ல் சேர்ந்த வ்ெறி யாடல்களும் பயன்படும் என்று ஆதி மனிதர்க்ள் கிண்த்தார்கள். இயற்கையை வெல்ல தமிழர்கள் கையாண்ட் மத்திரமுறை சித் தம் என்று வழங்கப்பட்டது. அதன் எச்சமே இப் பாடலில் காணப்படுவது. இதுபோன்ற மந்திர முறைகளினின்றே இயற் கையை புறவயமாக உணரக்கூடிய விஞ்ஞானம் தோன்றிற்று. "மந்திர முறைகளே விஞ்ஞானத்தின் தாய்' என்று விஞ்ஞான அறி ஞர் டாக்டர் பெர்ளுல் கூறுகிரு.ர். 8. மலடு தாய்மை உலக மக்களால் போற்றப்படும் பண்பு. குழந்தை பெற்றவர்கள் எதிரே வந்தால் கல்ல் சகுனம் என்று கிராம மக்கள் கம்புகிருர்கள். அவர்கள் தொட்டதெல்லாம் சீராகும் என்ற நம்பிக் கையின் காரணமாகப் பல சடங்குகளில் அவர்களுக்கு முதன்மை தரப்படுகிறது. குழந்தை இல்லாத பெண்களுக்கு இம்மையின் பயனும், மறுமையின் பயனும் இல்லை என்ற நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது. மலடியின் வீட்டில் ஆடு மாடும், செடி கொடிகளும் செழிப்பாக வளரமாட்டா. இல்லறத்தின் பய்ன், இரந்தோர்க்கு ஈதல் என்னும் உரிமை அவர்களுக்கு இல்லை. பிள்களகள் கொள்ளி வைத்தால்தான் மறுமைக்கு வழிபிறக்கும். ஆகவே மீறுமையிலும் அவர்களுக்கு இன்பமில்லை. இந்த நம்பிக்கைகளை எல்லாம் ஒரு மலடியின் வாய்ச்சொல்லாக இப்பாடல் அமைக்கிறது. சின்னத் தம்பி வில்லுப் பாட்டுக் கதையில் இப்பாடல் வருகிறது. சின்னத் தம்பியின் தாய் பூலாள் வெகுவாள் கருவுருமல் இருந்தாள் அவள்