பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் தனது மலட்டுத் தன்மை கண்டு வருந்தி ராமப் பகடையை மறு மணம் செய்துகொள்ள வேண்டுகிருள். அவன் மறு த்துவிடுகிருன். நான் தான் மலடானேன் காட்டிலுள்ளோர் தான்நகைக்க கையாலே வள்த்தெடுத்த கரும்பூச்சியுந் தான் மலடு ஈளுக் கிடாரியான எருமையுந் தான் மலடு காராம் பசுவும் கன்று கிடாகியுமே தான் மலடு முற்றத்திலேற்ேகுமந்த முள் முருங்கை தான் மலடு காயுமே தான் மலடு கான் மலடாய்ப் போனேனே. f பூக்கிற காலத்தில் பூமாறிப் போனேனே காய்க்கிற காலத்தில் காய்மாறிப் போனேனே என் தரத்துப் பெண்டுகள் ஏழு பிள்ளைத் தாயாளுர் இருடியாய் பெண் மலடாய் இருக்கேனே மன்னவரே பிள்ளையில்லா வாசலென்ருல் பிச்சைகூட வாங்கார்கள். மழை பெய்த முற்றத்திலே மண்ணளய மைத்தனில்லை வட்டிலிலே சோறுபோட்டால் வாசிபுண்ண மைக்தனில்ல வாழ்ந்திருக்தே இருபேரும் வைகுண்டம் சேருங்காலம் சேர்ந்திருந்தே இருபேரும் சிவன் பாதம் சேருங்காலம் உற்றுருமை செய்தனுப்ப உரிமையான பிள்ளையில்லே கொள்ளிக்கு மைந்தனில் குடமுடைக்க மைந்தனில்ல தீக்கடனும் நீர்க்கடனும் செய்துவரப் பாலனில்ல எள்ளுகல்லோ தண்ணீரும் இறைத்துவிடப் பாலனில்லை. 3. (சின்னத்தம்பி வில்லுப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டது ) 22 9. கொஞ்சல் மொழி குழந்தை பிறந்து ஐந்தாறு மாதத்தில் அது பெரியவர்களைப் பார்த்துப் பேசி விளையாடுகிறது. அச்சமயத்தில் அது தன் குரல் ಮಸ್ತಿತ್ತಿತ್ತು இங்க்.இங்க் என்ற சப்தத்தை எழுப்பி அதனேக் கேட்டு மகிழ்ச்சியடைகிறது. அப்பொழுது அது பலவிதமான ஒலிகளைக் கேட்டால் தானும் அதை ஒலிக்க முயலும், அது கற்றுக் கொள்ள வேண்டிய ஒலிகப் பாட்டாக ஒலித்தால் அது ஆர்வத்தோடு கேட்டுத்திரும்பத்திரும்ப ஒலிக்கும் ஒலிகளைச் கற்றுக் கொள்ளும்,