பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 10. கழற்சிப் பாட்டு சிறுமியர் விளையாட்டுகள் பல தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றுள் சில:அம்மானே கழற்சி, பல்லாங்குழி ஆகியவையாகும். அம்மானை, க்ழற்சி, விளையாடும், சிறுமியர்களும் பெண்களும், அவற்றிற்குரிய பாட்டுகளைப் பாடிக்கொண்டே ஆடுவார்கள். அவர்க்ள் வாய்கள் பாட, கைகள் கழற்சிக் காய்களே எண்ணிக்கை பிசகாமல் கவனத்துடன் தரையிலிருந்து எண்ணிக்கைக்குத் தகுக் தாற்போல் எடுக்கக் கண்கள் தரையிலேயும், மேலேயும் செல்லும் தாய்க்கழற்சி எனச் சொல்லப்படும் ஒரே ஒரு கழற்சிக் கல்லின் மீதும் மாறிமாறிச் சுழல கவனமாக ஆடிக்கொண்டிருப்பார்கள். கழற்சிப் பாட்டு, ஒன்றிலிருந்து பத்து முடிய ஆடுவதற்கும், அதன் பின் பழம் எடுப்பதற்காகப் பாடப்படும் கடைசிப் பாட்டு முடிய இருக்கும், எண்ணிக்கைக்குத் தகுந்த வார்த்தைகள் அவற்றிற்கு இருக்கும். சிலவற்றிற்கு அர்த்தம் இல்லாமலும் இருக்கலாம்: கழற்சிக்காய் ஏழு உண்டு. அவைகளில் ஆறைத்தான் தரையில் போட்டு எண்ணி எடுப்பார்கள. ஒரு காயை ஆடும் காயாக உய ரத் தூக்கிப் போட்டு விளையாடுவார்கள் அந்தக்காய் உயர போய்த் திரும்பிவருவதற்குள், கீழே உள்ளவற்றை கைதவற விடாமல் எடுக்கவேண்டும். உதாரணமாக முதல் ஆட்டத்தில் கீழே ஆறு காய்கள் இருக்கும். அவற்றை ஆறுதரமாக ஒவ்வென்

முக, எடுக்கவேண்டும். தாய்க் கழற்சிக்காய் ஆறுதரம் மேலே போய் வரும். அடுத்த ஆட்டம் இரண்டு. இவ்வாறு பத்துமுடிய ஆடுவார்கள். இவற்ருல் அவர்களுக்குக் குறிதவருமல் காய்களைப் பிடிக்கும்.பழக்கம் ஏற்படுகிறது. முதன்மையூக்கம் ஏற்படுகிறது. கைகளே உயரத்துக்கி, கீழே இறக்கி ஆடுவதில்ை தேகப்பயிற்சி ஆகிறது. பாட்டுகளைப் பாடும் பொழுது ஒவ்வொரு பழத் திற்கும் ஆவற்றைப்பாடுவதனுல் திருத்தமாகப் பேசும் தன்மை உண்டாகிறது. உச்சரிப்புத் திருந்துகிறது. சொற்களஞ்சிய அபி விருத்தி ஏற்படுகிறது. ஒண்ணுன் : (குறிப்புரை-குமாரி டி. மங்கை) 1. ஒளி உலகெல்லாம் உலகெல்லாம் தண்ணியிலே தண்ணிக் கரையிலே தவக்த மணலிலே முல்லைக் கொடியிலே பிள்ளைக் கழுகிருள்.