பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளையாட்டு

35


கட்டு=நெல்லில் பார்க்கும் ஒருவகைக் குறி,

கழங்கு=ஒருவகைக் காய்.

வேலனது கழங்காட்டத்தைப் பின்பற்றிக் கழங்கை பண்டை மகளிர் விளையாட்டாக ஆடினார்கள். பெரும்பாணாற்றுப் படை வில் செல்வச் சிறப்புடைய மகளிர் பொன்னால் செய்த கழங்கை கடற்கரை மணலில் இருந்து ஆடினார்கள் என்று கூறுகிறது.

“முத்த வார் மணல் பொற்கழங்காடும்

பட்டின மங்கு” (பெரும்பாணாற்றுப் படை 335, 336)

கழங்காடும் பொழுது பாடும் பாட்டு அம்மானை வரி எனப் படும். பண்டைக் காலத் தமிழ் மகளிர் எப்பாடல்கள் பாடிக் கழங்காடினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பிற்காலத்தில் கேள்வியும், பதிலுமாக வரும் பாட்டை அம்மன் பெயரைச் சொல்லி ஆடுவார்கள். பெண்களது இடுக்கண்களைப் போக்குபவள் அம்மன்தான். அப்பாட்டில் நாட்டு வாழ்த்தும் மன்னன் வாழ்த்தும் காணப்படும். உதாரணமாக, சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் அம்மானை வரியைக் கூறலாம்.


புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்
குறைவில் உடம்பரிந்த, கொற்றவன் யாரம்மானே!
குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன் வந்த
கற ைமுறைசெய்த காவலன்

காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானே !

ஆடலோடும், பாடலோடும் இனேந்திருந்த அம்மானேவt மாணிக்கவாசகரால் கடவுள் வாழ்த்தாகப் பயன்படுத்தப்படு கிறது. அவர் பாடிய அம்மானேப் பத்து விவிைடை வடிவத்தில் இல்லை. பெயருக்கு அம்மன் ஈற்றடியில் அம்மாளுய் என்று வந்தாலும், அச்சொல் முன்னிலையாக மட்டும் இருக்கிறது. வாழ்த்து சிவபெருமானுக்கே கூறப்படுகிறது. ம்களிர் விளையாட் டிலும் கடவுள் வாழ்த்தைப் புகுத்துகிருர் மாணிக்கவாசகர்.