பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 12. ஈக்கி ஈக்கி சோளத் தட்டை இந்திரவாளச் சோளத் தட்டை பணத்துக்கு ரெண்டு கட்டு அப்பா சுடலைமுத்து எப்பக் கலியானம் காடு விளையவிட்டு கண்டாங்கி கெய்யவிட்டு சிறுக்கி சமையவிட்டு சித்திரை மாதம் கலியானம். 12. கண்ணுமூச்சி சிறு குழந்தைகள் தேடிப்பிடித்து விளையாடுவதில் மிகுந்த உற்சாகம் காட்டுவார்கள். இவ்விளையாட்டில் புலனுணர்வு வளர வும், பிறரை ஆராயும் திறன் வளரவும் இடமுண்டு. கண்ணே மூடிக்கொண்டிருக்கும் போது ஒரு பாட்டும், ஒளிந்தவர்களைக் கண்டுபிடித்தால் ஒரு பாட்டும் பாடுவார்கள். அவை வருமாறு. கண்ணுமூச்சி டே, டே காட்டு மூச்சி டே, டே உனக்கொரு பழம் எனக்கொரு பழம் கொண்டு வ | தேனு, பேனு, தெக்திருப்பேனு ១ប៉ប្តេ អ៊ី, ហ្វ្របំរុ អ៊ &#65 цqi і I ? (என் தாயார் பாடக்கேட்டு எழுதியது)