பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட் சோர்ந்த மனத்துக்கு ஊக்கம் அளிப்பது பாட்டு , ஒடிந்த உள்ளத்தை நிமிர்ந்து கிற்கச் செய்வது செய்யுள். உழைக்கும் போது களைப்புத் தோன்ருமல் வேலையை விரைந்து செய்யும்படி கடத்திச் செல்வது பாட்டு ; அழுகின்ற குழந்தைகளைத் தூங்கும் படி செய்யும் சக்தி பாட்டுக்கு உண்டென்முல் பாட்டின் பெருமை. யைச் சொல்லி முடியாது. எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் பாட்டுப் பாடிக் கொண்டே எளிதிலே செய்யும் வழக்கம் எங்கும் உண்டு. நமது காட்டில் ஒவ்வொரு தொழிலாளர்களும் அவரவர்கள் தொழிலுக் கேற்பப் பல பாடல்களைப் பாடுகின்றனர். ஏற்றப்பாட்டு , உழ வுப்பாட்டு, வண்டிக்காரன் ;பாட்டு, கடவுப்பாட்டு ; ஒடக் காரன் பாட்டு, கண்ணம் இடிப்போர் பாட்டு இவ்வாறு பல பாடல்கள் வழங்குவதைக் காண்கின்ருேம். ஆண் தொழிலாளர் களும் பாட்டுப் பாடிக்கொண்டு வேலே செய்கின்றனர்; பெண் தொழிலாளர்களும் பாட்டுப்பாடிக்கொண்டு வேலைசெய்கின்றனர். பிள்ளைகள் விளையாடும்போது பாட்டுக்கள் பாடுகின்றனர். பழங்காலத்து விளையாட்டுக்களான கண்ணுமூச்சி, சடுகுடு, கிளிக் கோடு அல்லது சதுரக்கோடு போன்ற பல் விளையாடல்களிலே பாட்டுக்கள் வழங்குகின்றன. இப்படி வழங்கும் பாடல்களைத் தான் காட்டுப் பாடல்கள் என்று சொல்லுகின்ருேம். நாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் எழுதாக் கவிதைகளாகவே வழங்கி வரு கின்றன. ஆதலால் அக்கவிதைகளிலே காலத்துக்கேற்ப மாறுதல் கள் தோன்றி வருகின்றன. காட்டுப் பாடல்களைப் படைக்கும்-அல்லது படைத்த-கவி சூன் யார் என்.ர சொல்ல முடியாது. அவைகளைக் காலத்திற்கு எற்றவாறு எந்தக் கவிஞனும் மாற்றுவதும் இல்லை. பொதுமக்கள் தாம்-பெரும்பாலும் உழைக்கும் மக்கள் தாம்-நாட்டுப் பாடல் களைப் பாடும்-பாடிய கவிஞர்கள் ஆவார்கள்; திருத்தும் கவிஞர் களும் ஆவார்கள். ஆகவே காட்டுப் பாடல்களைப் பொதுஜன இலக் கியம் என்று சொல்வது பொருத்தும். பொதுஜனக் கவிதை என்று