பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<side heading>சொன்னலும் பொருந்தும். <point>நாட்டுப் பாடல்களின் வழியாக, நமது நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களைக் காணலாம். மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி ஜில்லாக்களிலே வழங்கும் நாட்டுப் பாடல்களில் பாண்டி நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களேக் காணலாம், தஞ்சாவூர், திருச்சி, தென்னுற்காடு முதலிய பகுதிகளில் வழங்கும் நாட்டுப் பாடல்களில் சோழ நாட்டுப் பழக்கவழக்கங்களைக் காணலாம். செங்கற்பட்டு, வடஆற்காடு ஜில்லாக்களில் வழங்கும் நாட்டுப் பாடல்களில் தொண்டை காட்டுப் பழக்க வழக்கங்களே கான லாம். சேலம், கோவைப் பகுதிகளில் வழங்கும் நாட்டுப் பாடல் களில் கொங்கு நாட்டுப் பழக்க வழக்கங்களைக் காணலாம். ஆகவே, நாட்டுப் பாடல்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகங் களாக வெளிவருமானல், நமது நாட்டுப் புராதன பழக்கவழக்கங் களே அறிவதற்கு அவை துனே செய்யும். காட்டுப் பாடல்கள் பழமையும் புதுமையும் கலந்த இலக்கிய மாகவே விளங்கும், பழமையான பண்பாட்டை விளக்கும் காட்டு பாடல்களுக்கு இத்தொகுபபிலேயே பல உதாரணங்களே க் காணலாம். இத்தொகுப்பின் மூன்முவ பகுதி, காதல் என்னும் தலைப்பிலே அமைந்திருக்கிறது. இப்பகுதியில் உள்ள 10. நாயின் காவல் என்னும் பாட்டு, தமிழரின் பழமைப் பண்பைக் குறிப் பது, கள்ளக் காதலில் ஈடுபட்டு வாழும் தலைவன் தன் காதலி யைக் காண இரவில் வருவதைக் குறிப்பிடுவது. இதனை இர வுக்குறி என்பர். 12. என்ன குற்றமோ ? என்னும் பாட்டு, காதல் நோய் கொண்ட ஒருத்தியின் துன்பத்தைக் குறிப்பிடுவது இது தலைவியின் துயரம் என்ற பகுதியில் அடங்கும். 33. புறப் படுவோம் என்னும் பாட்டு, உடன்போக்கு என்னும் அகப் பொருள் துறையைப் பின்பற்றியதாகும். 42. காலம் கடத்துவேனே என்னும் பாட்டு. தலைவன், தலைவியை மணந்து கொள்ளுவதற்கு வாக்களித்தலாகும். இதனே வரைவு கடாதலும், வரைவு உடன் படுதலும் என்ற அகப்பொருள் துறையில் சேர்க்கலாம்; இவ்வாறு பழம் பண்பை விளக்கும் பாடல்கள் காட்டுப் பாடல்களில் மிகுதி யாகக் காணப்படுகின்றன. <</point>>