பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும் 63 அtiயாப் படியளந்தால் ஆக்க நேரஞ் செல்லுமின்னு சோறுப் படிய க்கும்-எங்களேயா :வாரியார் பண்ணயிது. (இப்பாடல் - ராஜவல்லிபுரம் ராஜகோபால கிருஷ்ணன் உதவியது. பழைய பத்திரிகை யொன்றில் 1934ல் வெளிவந்தது.) 5டுகைக் காட்சிகளே விளக்கும் பாடல்கள் பள்ளுப் பாட்டுக் களில் காணப்படுகின்றன. முக்கூடற்பள்ளு நடுகை வேலையை பும், பின்னணியில் கடக்கும் காதல் விளையாட்டுகளையும், உழைப் போடும், காதலோடும் கலந்து பிறக்கும் பாடல்களேயும் வருணிக் கிறது. கிராம இளைஞர்களது உணர்ச்சிகளே மிகவும் அழகாக சித் தரிக்கின்றது. இக்கவிதைகள் தோன்றுவதற்கு சேரிகளில் வழங்கி பக்த நடுகைப் பாட்டுக்களே ஆதாரமாக இருந்திருக்கவேண்டும். 300 வருஷங்களுக்கு முன்பு பள்ளுப்பாட்டு தோன்றியது. அக் காலத்தில் நடுகைப்பாட்டு ஏராளமாக இருந்திருக்கவேண்டும். இக் காலப் பாட்டுக்களில் கடுகைக் காட்சிகளைப் பற்றிய பாட்டுக்கள் காணப்படவில்லை. வெள்ளேயர் ஆட்சியில் நிலவுரிமை இழந்து அத் தொழிலாளர்கள் ஆகிவிட்ட சேரிமக்கள் உள்ளத்தில் தொழிலில் உற்சாகம் குறைவது இயல்புதானே. தொழிலில் இன்பம் இல்லாதபோது இப்பாட்டுக்கள் மறைந்ததில் வியப்பில்லே. பழைய பாடல்களில் பல சிற். பார்களில் இன்னும் வழங்கி வர லாம். அவை முற்றிலும் வழக்கொழிந்து போவதற்குமுன் சேக ரிக்கவேண்டும். -: ---