பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் உருண்ட முழி திரண்ட முழி உள்ளுருச் சிவத்த புள்ள இலந்த முள்ளும் தலைமுடியும் இழுபடுதே சந்தியிலே. காப்பிக் கடை ஒரத்திலே கரும்புக் கடை கம்ம கடை கரும்பு வாங்க வந்த புள்ள கட்டப் புள்ள கம்ம குட்டி. ஆல விழுதெடுத்து ஆள் காட்டி வித்தெடுத்து கோரக் கிழங்கெடுத்து கூட்டுருனே கைமருந்து. (சேகரித்தவர் : சிவகிரி-கார்க்கி): (கடைசி அடிகளில் புல்கட்டுக்காரியின் அங்க அசைவுகளில் சடுபட்ட காதலன் அவையனை த்தும் மயக்க மருந்தென்று கூறுகிருன்..! 15. காத்திருந்து வீண் போனேன் பிறரறியாமல் கிராமப்புறத்துக் காதலர்கள் சந்திப்பதற்குப் பல இடையூறுகள் கிகழும். அவள் வர வாய்ப்பிருந்தால் அவன் வர வாய்ப்பிருக்காது. அப்பொழுது அவனே அவள் நொந்து கொள்வாள். அவளும் வர முடியாமல் போகலாம். அவன் -~ கொங்க கொள்வான். ஆவல் மிகுதியால் இவ்வாறு கொந்து கொண்டாலும் இடையூறுகளின் து அவர்கள் சமாதானம் அடைவார்கள். இப்பாடல்கள் இருவர் மன நிலையையும் உணர்த்துகின்றன. பெண் : ஆலமரம் உறங்க அடி மரத்துக் கொப்பசைய ஊரு உறங்காதோ உங்க படி கானுதங்க,