பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v 1{ களேப் படித்தால் அருமை அறியலாம். இவை போன்ற இயற்கை யான கற்பனை அமைந்த பாடல்கள் பலவற்றைக் காணலாம். நாட்டுப் பாடல்களே எல்லோரும் பாடலாம் ; எல்லோரும் படிக்கலாம். அவ்வளவு எளிய முறையிலே-சாதாரணமாகப் பேசும் பாஷையிலே அவைகள் அமைந்திருக்கின்றன. பொது ஜனங்களால் உருவாக்கப்படும் பாடல்கள் வேறு எப்படியிருக்க முடியும்? சிலர்-நாட்டுப் பாடல்கள் என்ற பெயரால் பாடல்களே வெளியிட்டிருக்கும் சிலர்-அப்பாடல்களேத் திருத்தமான மொழியிலே வெளியிட்டிருக்கின்றனர். இந்தத் தொகுப்பின் ஆசிரியர் அத்தகைய தவறு செய்யவில்லை. இதைப் பெரிதும்' பாராட்டுகின்றேன். இத்தொகுதியில் உள்ள பாடல்கள் எல்லாம் திருநெல்வேலி ஜில்லாவில் கோயில்பட்டி தாலுக்கா, சிவகிரிப்பகுதி, விளாத்தி குளம் வட்டாரம் ஆகிய பகுதிகளிலிருந்து தொகுக்கப்பட்டவை என்று தொகுப்பாசிரியர் கூறுகின்ருர், அப்பாடல்களே அப்படியே வழங்குகிறபடியே திருத்தாமல் வெளியிட்டிருப்பதனால் அவர் களுடைய பேச்சு வழக்கை அறிய முடிகிறது. பறந்திருச்சு, போயிருச்சு, குட்டிருவேன், பேசிருவேன், அடியாதிய, பிடியாதிய, மாத்தையிலே, சிக்கேன், போன்ற சொற் கள். திருநெல்வேலி ஜில்லா மக்கள் பேச்சு. இவைகள் தஞ்சை ஜில்லாவில் முறையே பறந்துாட்டுது, போயிட்டுது, குட்டிடுவேன் அல்லது சூட்டுவேன், பேசிடுவேன் அல்லது பேசுவேன், அடிக்கா திங்க, பிடிக்காதீங்க, மாசத்திலே. கிக்கிறேன் என்று வழங்கும், இவ்வாறு ஒவ்வொரு பகுதி மக்களின் பேச்சிலே வித்தியாசங்கள் உண்டு. நாட்டுப் பாடல்களேத் தொகுப்போர், அந்தந்த வட்டாரத்து மக்கள் பேச்சுக்களே அப்படியே அமைத்துத் தொகுக்கவ்ேண்டும். இதல்ை இலக்கியச் சுவை குறைந்துவிடாது.உலக வழக்கு வேறு; இலக்கிய வழக்கு வேறு என்பதைப் படித்தவர்கள் அறி வார்கள். நாட்டுப்பாடல்கள் உலக வழக்கை உணர்வதற்கு உத வும் பாடல்கள்; ஆதலால் அவைகள் வழக்கில் உள்ளபடியே எழுதப்படுவதுதான் சிறந்தது.