பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பகுதி-காதல்

மானைக் கண்டேன் மந்தையிலே
மயிலேக் கண்டேன் கூட்டத்திலே
தேனேக் கண்டேன் தெருவினிலே
திங்காமல் பேரானேன்.

ஆளைப் போல் ஆளில்?ல
அவரைப் போல் சொகுசில்லை.
பூரான் சுழி விழுந்தவரு
போகாத இடம் இல்லை.
கட்டிலுண்டு மெத்தையுண்டு
கதனோரம் படுக்கையுண்டு:
வீட்டிலொரு வேங்கையுண்டு:
வேளை பார்த்து வாங்கசாமி.

காலு கதவடி
காராங்கிப் பின்னலடி
ஏபுண்ணமார் காவலடி
எந்த விதம் கான் வருவேன்?

கடிகாயைக் கண்ணக்கட்டி
ஏவல் காயை வாயக்கட்டி
ஏழண்ணமார் கண்ணக்கட்டி
ஏறிவாடா கற்கோட்டை!

நாலு கதவாயிலயா
காராங்கிப் பின்னலயா
ஏழு பேரு காவலயா
எவ்விதமாய் நீ வருவே ?

காடுமலே தாண்டி
கரடி புலி வாயைக் கட்டி,
ஏழு பேர் கண்ணக்கட்டி
ஏறு வேண்டி கற்கோட்லட.

ஆதரித்தவர் : எஸ்.எஸ். போத்தையா