பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RA PUBLIC LIBRA 31 DEC 1934 MADR.15-500 008. 1. இடமும் மக்களும் தமிழ்நாட்டின் பூகோளம், வரலாறு, இங்கு நிலவும் சமயங்கள், பெரும்பாலும் வாணிகத்துக்காக உலகெங்குமிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அறிஞர்களால் பரவிய கலைகளின் செல்வாக்கு - இவை யாவும் சேர்ந்து தமிழ்மக்களுக்கு ஒரு தனித் தன்மையை உண்டாக்கியிருக்கின்றன. பல்வேறு தமிழ்நாட்டு மக்களில் உயர்கல்வி பெற்றவர்களின் சிந்தனை, மரபு, பண்பாடு எல்லாம் அண்மைக்காலத்தில் மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கியிருக்கின்றன. எனினும், சங்க காலமும் பழந்தமிழ்ப் பெருமை யுமே தங்களுக்கு எழுச்சி தருவதாக அவர்கள் பெருமையுடன் சொல்லுகிறார்கள். மக்களின் அன்றாட வாழ்வில், குறிப்பாகக் கிராமங்களில், பழந்தமிழர்களின் நடை, உடை, உணவு, பழக்க வழக்கங்கள், சிந்தனைகள், மதிப்பீடுகள் போன்ற எல்லாப் பாவனை களிலும், பழந்தமிழ்ப் பண்பாடு அழியாது இன்றளவும் நின்று நிலவி வருவது ஒரு தனிச்சிறப்பு எனலாம். ג இந்தியாவின் ஏனைய பகுதிகள் வெளிநாட்டுப் படையெடுப்பு, போர் முதலிய இக்கட்டுக்களுக்கு உள்ளானதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பெருமளவுக்கு அமைதியான ஒரு சூழ்நிலையைத்தான் தமிழ் நாட்டு வரலாற்றில் காணுகிறோம். அரசியல் கொந்தளிப்புக்கள் குறைந்து, பொருளாதார நிலையும் ஏறத்தாழ ஒரே அளவினதாக இருந்து வந்திருக்கிறது. இதனால், தொன்றுதொட்ட மரபு அழியாது காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதிகாலையிலும் அந்தி மாலையிலும் இறைவழிபாடு, உண்பது நாழி உடுப்பன இரண்டே, கந்தையானாலும் கசக்கிக் கட்டுவது, குறித்த நேரப்படி பசி தீர்த்துக்கொள்வது, மேலை நாகரிகத்தால் உடை மாற்றம் ஏற்படாது பெண்கள் தொடர்ந்து சேலையையே கவினுற உடுத்துவது-காலம் மாறினாலும் இந்த மரபுகள் அணுவளவும் மாறவில்லை. இராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?