4 மக்கள் கிழக்குத் தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் தொடர்ச்சி மலையையும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் சேர்த்து ஒரு முடிச்சுப் போட்டிருப்பதுபோல, அவை இரண்டும் தமிழ்நாட்டில் கூடுகின்றன. தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளும் அவற்றின் உச்சியிலுள்ள எழில் மிகு நகரங்களும் வெவ்வேறு வகையான தேவைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் நிலவுவதுபோன்ற கடுங் குளிரில் பழக்கப்பட்டவர்களுக்கு ஏற்றது, இந்திய மலைவாச நகரங் களுள் தலைசிறந்து மலையரசியாகத் திகழும் உதகமண்டலம். அந்த அளவு குளிரைத் தாங்க முடியாமல் இருப்பவர்களுக்கும் அமைதியை விரும்புபவர்களுக்கும் உரியது கோடைக்கானல். குறைந்த செலவில் வாழ விரும்புபவர்களுக்கும் நெஞ்சு வலி உடையவர்களுக்கும் ஏற்ற வாறும் தமிழ்நாட்டில் மலை நகரங்கள் உள்ளன; இவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் கூனூரும் கோத்தகிரியும், கோவை மாவட்டத்தில் ஆனைமலையில் டாப்ஸ்லிப்சும் வால்பாறையும், சேலம் மாவட்டத்தில் ஏர்க்காடும், வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஏலகிரியும் குறிப்பிடத்தக்கவை. இந்த மலை நகரங்களில் வாழ் வதற்குக் கம்பளி ஆடை இன்றியமையா தது, ஆனால் தென்னிந்தியாவின் நீராடுமிடம் என்ற பொலிவும் புகழும் பெற்ற திருக்குற்றாலத்தில், கம்பளி உடைகள் தேவையில்லை. அநேகமாக ஒவ்வொரு மாவட்டமும், இத்தகைய ஒரு மலைநகரம் அல்லது கடலோரத்தில் ஒரு சுகவாச நகர் உடையதாகவே இருக்கிறது. பொள்ளாச்சிக்கும் பாலக்காட்டுக்கும் இடையே உள்ள பள்ளத் தாக்கு வளம் கொழிக்கிறது. கம்பம் பள்ளத்தாக்குக்கும் இத்தகைய சிறப்பு உண்டு. இவ்விரு பகுதிகளும் இவ்விரு பகுதிகளும் எழில்மிக்க காட்சிகளும், ஏராளமான பணப்பயிர்களும் நிறைந்தவை. காடுகள் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க விலங்குகள் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி ஆகியவை. முதுமலையிலுள்ள வனவிலங்குச் சரணாலயத்தில் இவற்றைக் கண்டுகளிக்கலாம். வேடந்தாங்கல் பறவைச் சரணாலயத்தில் பல நாடுகளிலிருந்தும் கண்டங்களி லிருந்தும் குளிரிலிருந்து தப்பிச் சிலநாள் இருப்பதற்காக வரும் பறவைகளைப் பார்க்கலாம். வேதாரணியம் வட்டத்துக் கோடிக் கரைக்கு அப்பாலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் கோடியக்காடு
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை