சரணாலயத்திற்கும் இடமும் மக்களும் 5 இத்தகைய பறவைகள் வருகின்றன. இந்த உலகம் சுற்றும் பறவைகளிடையே வர்ணத்தாரை, வெண் கொக்கு, நரையான், பூநாரை, அரிவாள் மூக்கு, உன்னிக்கொக்கு-இப்படி எண்ணற்ற வகைப்பறவைகள் உண்டு. மலர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர். சின்கோனா என்ற ஒருவகை மரம் இருக்கிறது; இதிலிருந்துதான் கொய்னா மருந்து தயாரிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் லட்சக் கணக்கில் பனைமரங்கள் உள்ளன ; சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு இவை வாழ்வளிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தின் தட்பவெப்ப நிலை, மலேசிய நாட்டின் தட்பவெப்ப நிலைக்குச் சமமானது. எனவே, இங்கும் தரத்தில் சிறந்த ரப்பர் உண்டாகிறது. நீலகிரியில் புதிதாக மரம் நடும் திட்டம் அல்லது காடு வளர்க்கும் திட்டத்தின்கீழ் யூகலிப்டஸ் எனப்படும் நீலகிரித் தைல மரங்கள் நடப்பட்டு வருகின்றன. வட ஆர்க்காடு மாவட்டத்தில் சவ்வாது மலையில் அங்குமிங்குமாகச் சந்தன மரம் பயிரிடப்படுகிறது. பழநி மலைத் தொடர்ச்சியிலும் திருக்குற்றாலமலைப் பகுதியிலும் மூலிகைகள் மிகுந்துள்ளன. ஆறுகள் . வான் வடமேற்கு, தென் கிழக்கு ஆகிய இரு பருவக்காற்றுக்களாலும் மழைநீர் கிடைத்து ஆண்டு முழுவதும் வற்றாதிருக்கும் ஆறு தமிழ் நாட்டில் பெயர் காவிரி ஒன்றுதான் உண்டு. அதன் பொய்ப்பினும் தான் பொய்யாக் கடற் காவிரி' என்று புலவர் நாவில் பொருந்திய பெருமையுடையது அந்தப் பேராறு. அது தமிழ் நாட்டின் ஊடே பாய்ந்து, இந்த மாநிலத்தை இரு கூறுகளாகப் பிரிக்கிறது. காவிரிக்கு வடக்கே பாலாறும் (வட) பெண்ணையும் காவிரிக்குத் தெற்கே, தமிழ் கண்ட வைகையும் தாமிரபரணி எனப் படும் தண் பொருநையும் இருக்கின்றன. இருக்கின்றன. ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் நகரங்களிலும் தலங்கள் உண்டாகி பெரும்பாலும் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் வியப்பூட்டும் கதையோ சுவையான புராணமோ இருக்கும். உள்ளன. ஒரு சான்று கூறலாம். மதுராந்தகம் ஏரி தமிழ்நாட்டின் பெரிய ஏரிகளுள் ஒன்று. அதன் பரப்பு 13 சதுர மைல், ஒரு முறை அடை மழையால் ஏரியின் கரை உடைந்துவிடும் நிலையில் இருந்தது. மக்கள் பயந்து ஊரைக் காலிசெய்யலாயினர். அப்போது, இராம
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை