8 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் ஆயிரம் முத்திலே ஆராய்ந்து எடுத்த முத்து சீரங்க நாதருக்கு சிரசில் இடும் ராணிமுத்து தொள்ளாயிரம் முத்திலே துளாவி எடுத்த முத்து மதுரை மீனாட்சிக்கு மார்பில் இடும் முத்து" வரலாற்றுப் பின்னணி பல வரலாறும் இதிகாச புராணங்களும் இலக்கியங்களும், மரபையும் பழமைச் சின்னங்களையும் ஆராய உதவுகின்றன. தமிழ் மக்க ளுடைய வாழ்க்கை முறைக்கும், ஒரு பெரும் வெள்ளம் அல்லது பிரளயத்துக்குமுன் சிந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்கள் என்று கருதப்படும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் இடையே, ஒற்றுமைகள் அல்லது பொதுத்தன்மைகள் உள்ளன. சில சின்னங் கள், கருவிகள், சான்றுகள் ஆகியவற்றுக்குப் புதைபொருள் அறிஞர் களும் இந்திய இயல் ஆராய்ச்சியாளர்களும் விளக்கம் கூறியிருக் கிறார்கள். ஆனால் இவர்கள் 'ஓரளவே' தெரிவித்திருக்கின்றனர். முழுமையான விளக்கம் இனிமேல்தான் வெளியிடப்பட வேண்டிய தாக உளது. , நிற்க. பலுசிஸ்தானத்தில் வழங்கும் புருகி என்னும் கிளைமொழி யில் முந்நாள் தமிழ் மொழியின் சின்னங்கள் காணப்படுகின்றன. தமிழர்கள் வடமேற்கு இந்தியாவில் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் அல்லது அங்குள்ள மக்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்திருக்க வேண்டும். வேண்டும். அதனால்தான் அப்பிரதேசத்தில் வழங்கும் மொழியில் தமிழின் பாதிப்பைக் காண்கிறோம் என்ற கருத்து இப்போது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. உணர்ச்சி வயப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டுக்கு இது உதவும். சங்க காலம் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான காலம், சங்க காலம் எனப் படுவது. இது இயேசு பிறப்பதற்கு முன்பு மூன்று அல்லது நான்கு
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை