பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் மக்களும் 9 நூற்றாண்டுகள் வரை நீடித்திருந்த ஒரு காலகட்டம். சங்க கால இலக்கியத்தில் இப்போது நமக்குக் கிடைத்திருப்பவற்றுள் பழமை யானவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமே. சங்ககாலத் தமிழ்நாட்டில் 'பாலும் தேனும் ஓடிய தாகவும் உணவு தானியங்களும் இறைச்சியும் மீனும் ஏராளமாக இருந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. மேற்கே இருந்த சேரநாடு, எருமை, பலா மிளகு, மஞ்சள் ஆகிய வளங்களைக் கொண்டிருந்தது. காவிரி பாயும் சோழநாடு தென்னாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கியது. தென் கோடியில் இருந்த பாண்டிய நாடு வள்ளிக்கிழங்கு, தேன், முத்து ஆகிய செல்வங்கள் உடையதாயிருந்தது. அந்நாளில் பரம்பரை முடியாட்சியே நிலவிற்று. அரசன் சர்வாதி காரியாக இருந்து நினைத்த காரியத்தைச் சாதித்தபோதிலும், அறிவுடையோர்களின் ஆலோசனையை மதித்து நடந்தான். இலட்சிய அரசனாக அவன் விளங்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். எனவே, நீதி வழுவாமலும் சத்தியம் தவறாமலும் உயர்ந்த குறிக்கோள்கள் உடையவனாகவும் அரசன் நடந்து கொள்ளவேண்டியவன் ஆனான். நகரங்களில் இராக்காவல் இருந்தது.சிலசமயம் அரசர்களே இக்காவல்பணியை மேற்கொண்டு இரவில் நகர்வலம் வந்தனர். தெருக்கூத்துக்களில் இந்தக்காட்சியை இன்றும் நடிக்கிறார்கள். பாமரர் கதைளிலும் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இசையும் நாடகமும் படிப்படியாக வளர்ச்சிபெற்று, மிக உயர்ந்த நிலையை எய்தியிருந்தன. வேட்டையாடுவது, மற்போர், குத்துச் சண்டை, பகடை ஆட்டம் முதலியன பொழுதுபோக்குகளாகவும் பலரும் விரும்பி ஆடும் விளையாட்டுக்களாகவும் விளங்கின. பெண்கள் மொட்டைமாடிகளில் சிறு பந்துகளை உருட்டி விளை யாடினர். இருபாலாரும் சேர்ந்து குளிப்பது, நீண்ட நெடுந்தூரம் நடப்பது ஆகியவை அன்றாட நிகழ்ச்சிகளாக இருந்தன. பொம்மை வில், அம்பு, பலவகைப் பொம்மைகள் ஆகியவற்றைக் குழந்தைகள் உபயோகித்தனர். பல்லவர் பல்லவ மன்னர்கள் அறிவும் ஆற்றலும் நிறைந்திருந்தனர். நாடகம், இசை, கட்டிடக்கலை, சமயத்துறை, போர்க்கலை ஆகிய பலவகை இயல்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றவராய், 'தங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்னும்படி கூரிய அறிவும் செயல்