இடமும் மக்களும் 11 சோழ அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சேரர்கள் நீர்வளச் செல்வம் நிரம்பியவர்களாயிருந்தனர். சோழர் சோழவம்சத்தில் ஆடவரும் பெண்டிரும் திறமைமிக்கவர் களாகவும் பேராற்றல் படைத்தவர்களாகவும் இருந்தனர். கலையழகில் ஈடுபாடு, அறிவுத் துறைகளில் நுண்ணிய ஆர்வம், சமயத்தில் ஆழ்ந்தபற்று ஆகிய மூன்று இயல்புகள் வழிவழியாக அவர்களுக்குக் கைவந்து அவர்களுடைய இரத்தத்திலேயே இரண்டறக் கலந்து விட்டன. புதிய கோயில்களைக்கட்டுவது, பழைய கோயில்களில் புதிய மண்டபங்கள் கட்டுவது அல்லது அவற்றை விரிவாக்குவது ஆகிய திருப்பணிகளைச் சோழர் பெரும் அளவில் மேற்கொண்டனர். அவை என்றென்றும் சோழர் புகழை நிலைநாட்டும். பத்தாம் நூற்றாண்டில் முதலாம் ராஜ ராஜசோழன் தஞ்சாவூரில் கட்டியுள்ள கோயிலும், அவன் மகனான முதலாம் ராஜேந்திரன் கங்கைப் பகுதியில் தான் அடைந்த வெற்றியின் நினை வாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டியுள்ள கோயிலும், மிகவும் அழகுவாய்ந்தவை. அவற்றின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இரண்டும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. வெண்கலத்தில் இறை உருவங்களைச் சமைப்பதிலும் சோழர்கள் தலைசிறந்து விளங்கினார்கள்; இந்தத் துறையில் அவர்கள் காட்டியுள்ள கைவண்ணம் ஈடு இணையற்றது. காலத்தைக் கடந்து நிற்கும் அவர்தம் கலைப்பெருமை எழுத்தில் இயலாது. . வடிக்க கிராம ஆட்சியை, சோழர் ஊக்குவித்தனர். கிராமப் பஞ்சாயத்து அங்கத்தினர்களுக்குச் சோழர்கள் கூடுதலான அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் கொடுத்தார்கள். ஏரிகள் வெட்டுவது, அணைக் கட்டுகள் கட்டுவது, வாய்க்கால்கள் தோண்டுவது ஆகியவற்றில் அவர்கள் பெரிதும் கவனம் செலுத்தினார்கள். திருச்சி மாவட்டத் திலுள்ள ஜெயங்கொண்டான் ஏரியும், தஞ்சை மாவட்டத்திலுள்ள கல்லணையும் அவர்கள் பொறியியல் துறையில் அடைந்திருந்த வியத்தகு முன்னேற்றத்திற்குச் சான்றாக விளங்குகின்றன. தென் கிழக்கு ஆசியாவில் தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும் பரவியுள்ள தற்குச் சோழர்களே பெரிதும் காரணமாவார்கள். இன்றுங்கூட, சயாம் என்னும் தாய்லந்து நாட்டில் அரசருடைய முடிசூட்டுவிழாவில் திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடப் படுகின்றன. இந்தோனேசிய மொழியிலும் மலாய் மொழியிலும் பல
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை