14 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் டென்மார்க் நாட்டுப் பாதிரியாரிடம் அவர் கல்வி பயின்றார். ஸ்குவார்ட்சுக்கு சரபோஜியிடம் இருந்த செல்வாக்கைப் பயன் படுத்திக்கொண்டு, டென்மார்க், ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாட்டினர் மராட்டிய ஆட்சியின்போது தஞ்சைக் கடற்கரை யெங்கும் வணிக நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் நிறுவிக் கொண்டார்கள். இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பொறா மையும் பூசலும் ஏற்பட்டன. இறுதியாக, புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி ஏற்பட்டு 150 ஆண்டுகளுக்கு நடைபெற்றது. சென்னை நகரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்தியக் கம்பெனி, தன்னுடைய தலைமை அலுவலகத்தை வைத்துக்கொண்டது. முஸ்லிம் ஆட்சி G 18-ம் நூற்றாண்டில் முஸ்லிம் அரசர்களான ஹைதர் அலியும் திப்புசுல்தானும் படையெடுத்ததால், தமிழ்நாட்டின் பெரும்பகுதியில் அமைதி குறைந்து கொந்தளிப்பு ஏற்பட்டது. ஹைதர் அலி என்றால் அழுத பிள்ளையும் வாய் மூடும் வாய் மூடும்' என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. வட ஆர்க்காட்டிலும் ஏனைய மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் தோன்றி, ஆர்க்காட்டு நவாப், அரசியலில் வல்லமை பொருந்திய ஒரு சக்தியாக விளங்கலானார். "நீ என்ன பெரிய ஆர்க்காடு நவாப் மகன் மாதிரி பேசுகிறாயே" என்று சாதாரண மக்கள்கூட நாட்டு வழக்கில் சொல்லுகிறார்கள். இதிலிருந்து நவாபுகளுடைய முக்கியத்துவத்தையும் பாமரமக்கள் சமுதாயத்தில் அவர்கள் பெற்றிருந்த நிலையையும் உணரலாம். நவாபும் அவருடைய போர்ப்படை வீரர்களும் மிகவும் விலையுயர்ந்த காலணிகளை அணிந்து கொண்டதால், "அடிபட்டாலும், ஆர்க் காட்டுச்சடாவால் அடிபட வேண்டும்' என்று ஒரு பழமொழி வழங்கிவருகிறது. நவாப் அத்தனை ஏழை, புலி அத்தனை சாது' என்பது இன்னொரு பழமொழி. பிரிட்டிஷ் ஆட்சி G தமிழ்நாட்டுக்கு ஏனைய மாநிலங்களைவிட முன்னதாகவே ஐரோப் பியத்தொடர்பு ஏற்பட்டுவிட்டதால், இங்கு ஆங்கில மொழியும் கிறிஸ்தவ சமயமும் பரவின. சமீபகாலத்தில் தமிழ் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு, இந்நாட்டில் பரவியுள்ள மேனாட்டு முறைக்கல்வியும் ஐரோப்பிய அறிஞர்களின் தமிழ்ப்பணியும் உறுதியாகத் துணை புரிந்திருக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும், பிரிட்டிஷ்
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை