பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் மக்களும் 15 ஃபிரெஞ்சு ஆட்சிகளுக்குட்பட்ட இடங்களில் தமிழர்கள் பெருவாரி யாகக் குடியேறினர். விடுதலைப்போர் இந்தியாவை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்கான இயக்கத்தில், தமிழ்நாடு பெரும்பங்கு கொண்டது. வீரபாண்டியக் கட்டப் பொம்மன் ஆங்கிலேயருடன் நடத்திய சண்டைகளும், சிவ கங்கைச் சீமையில் ஆங்கிலேயப் படையுடன் சலியாமலும் துணிச் சலுடனும் மருது சகோதரர்கள் புரிந்த ஓயாத போர்களும், வேலுத் தம்பி, பூலித்தேவர் ஆகிய விடுதலை வீரர்களின் வீரம் நிறைந்த பல போராட்டங்களும், வேலூரில் நிகழ்ந்த சிப்பாய்க் கலகமும் தமிழ் நாட்டின் சுதந்தர இயக்க வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்கவை. இவற்றில் சில நிகழ்ச்சிகளைப்பற்றிய நாட்டுப் பாடல்களும் தெருக்கூத்துக்களும் பாமரர் உள்ளங்களில் பதிந்துள்ளன. பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா, இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு, தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி, ராஜாஜியின் சீரிய தலைமையில் வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாக்கிரக வீரர்கள் அணிவகுத்துச் சென்றது தான். எவருக்கும் தீங்கிழைக்காமலும் வன்முறையின்றி யும் இந்தப் போராட்டம் நடைபெற்றது என்பது, 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற நாமக்கல் கவிஞர் பாடலால் தெரியவரும். இதற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடந்த இந்திய விடுதலைப் போர் சம்பந்தமான முக்கிய நிகழ்ச்சிகளாக, கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார், சுதேசிக் கப்பலை மிதக்க விட்டதையும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்திலும் திருவாடானையிலும் தேவ கோட்டையிலும் திருப்பூரிலும் வன்முறைச் செயல்கள் நடைபெற்ற தையும், ஜப்பானியரால் பர்மாவும் மலேயாவும் கைப்பற்றப்பட்டபின் அங்கு நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சேர்ந்ததையும் குறிப்பிடலாம். இதற்கும் முன்னதாக, தென்ஆப்பிரிக்காவில் தமிழ் இளைஞர் சிலர்-ஆடவரும் பெண்டிரும் -காந்தியடிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். என்னை உருவாக்கியதில் அவர்களுடைய "