பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் மக்களும் 19 சான்றாக, நகை வணிகர் தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ளனர். இதே போல, கண்ணாடிக்காரத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, தொட்டியன் கிணற்றுச் சந்து என்பவை அந்தந்தத் தொழிலாளர்கள் தொகுப்பாக வாழ்ந்த பகுதிகளாகும். பழமையும் வைதிகமும் நீங்கி பகுத்தறிவு பரவி வருவதால் கிராமங்களின் அமைப்பும் நகரங்களின் அமைப்பும் வெகு வேகமாக மாறி வருகிறது. சில அக்கிரகாரங் களில் ஏனைய சாதியாரும் இப்போது குடியிருக்கிறார்கள். இந்துக்கள் தவிர ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் கிராமங்களின் புறப்பகுதி களிலோ, அல்லது அகப்பகுதிகளில் குறிப்பிட்ட ஓர் இடத்திலோ வாழ்ந்தனர். இதெல்லாம் கடந்த காலத்திய நிலை. இப்போது 'சேர்ந்து வாழ்வது' வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, திருவிழாக்கள் எல்லாச் சாதிகளையும் இணைக்கின்றன. திருவிழாவை நடத்துவதில் ஒவ்வொரு சாதிக்கும் குறிப்பிட்ட ஒரு கடமையும் பொறுப்பும் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது, இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய சமயங்கள் பரவியது, சமீப காலத்தில் பகுத்தறிவு இயக்கம் தோன்றி யது முதலிய சூழ்நிலைகளால் இந்துமதத் திருவிழாக்களில் அவற்றின் பழமைச் சிறப்பு குன்றியது. இந்து மதத்தைப் பலரும் தாக்கினர். தாக்குபவர்களின் எதிர்ப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதே இந்து மதத்தினரின் பெரிய வேலையாகப் போய்விட்டது. இந்தப் பின்னணியில் அமெரிக்கப் பெருநகரான சிக்காகோவில் கூடிய உலக மதங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகா னந்தர் இந்து மதத்தை விளக்கி அரியதோர் உரை நிகழ்த்தி அதன் வாயிலாக இந்தியாவின் பெருமையும் பழஞ்சிறப்பும் கொடிகட்டிப் பறக்கச் செய்தார். அவருடைய சிக்காகோப் பயணம் வரலாற்றுச் சிறப்புடையது. அந்தப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம், முக்கடலும் கூடி முழங்கும் கன்னியாகுமாரியில் சுவாமிகள் தவம் இருந்தபோதுதான் அவருக்குத் தோன்றிற்று. அந்தப் பயணத்திற்குரிய செலவுகளை இராமநாதபுரம் அரசரும் புகழுடன் விளங்கிய வள்ளலுமான பாஸ்கர சேதுபதி அவர்களே ஏற்றுக்கொண்டார்.... விவேகானந்தர் இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், சென்னையில்தான் இராமகிருஷ்ண மடத்தை முதன் முதலாக நிறுவினார். அது இப்போது இந்தியாவெங்கும், உலகெங் கும், கிளைவிட்டு இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் புகட்டிய அறிவுரைகளை நாளும் பரப்பி வருகிறது.