பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கவும் சந்தைகள் இடமும் மக்களும் உதவுகின்றன. அதனால் திருவிழாக்களை ஓட்டிச் சந்தைகள் கூடுகின்றன. 21 பெரும்பாலும் முன்பு அந்தந்தச் சாதியினரின் தொழிலுக்குத் தக்கவாறு, அவர் களுடைய பொருளாதார அமைப்பு இருந்தது. பிராமணர்கள், கோயில் பூசை முதலிய வேலைகளையும் பஞ்சாங்கம். சோதிடம் பார்த்துச் சொல்லுவதையும் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். சமீப காலம்வரை அவர்கள் நிலையான வருவாய் தரும் உத்தியோகம் செய்பவர்களாக இல்லை. அரசர்கள் கொடுத்த நில மானியங்களிலிருந்து கிடைத்த வருமானத்தையே அவர்கள் எதிர் பார்த்து வாழ்ந்துவந்தனர். எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்ற கொள்கை உடையவர்களாக இருந்தனர். ஈடுபட்டிருந்தவர்கள். - கோவையில் கவுண்டர்கள், செங்கற்பட்டிலும் பிற மாவட்டங் களிலும் முதலியார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் பிள்ளைமார் இவர்கள் வேளாளராக, பெரிய அளவில் வேளாண்மைத் தொழிலில் அவர்கள் வேளாண்மை வேலைகளை மேற் பார்த்து, தங்கள் உபரி விளைவுகளை விற்று வருவாய் பெற்றனர். கிராமங்களில் வாணிபம் கோமுட்டிச் செட்டிகள் போன்ற வைசிய சாதியார் கையில் இருந்தது. சமீபகாலத்தில், தமிழ்நாடெங்கும், வியாபாரத் துறையில் முன்பு வைசியர்கள் வகித்த இடத்தை நாடார் சமூகத்தார் வகிக்கின்றனர். முன்பு கள் இறக்குதலில் ஈடுபட்டிருந்த சாணார்கள், சுதந்தரத் துக்குப் பிறகு, தங்களுடைய பேருழைப்பால் வணிகத் துறையில் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய நிலையை அடைந் துள்ளனர். விவசாய வேலைகளைப் பார்க்கும் முக்கிய தொழிலாளர் களாக தீண்டப்படாத மக்களே, இருந்து வந்துள்ளனர். இந்தச் சாதியார் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்து வயிறு வளர்த்து வந்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் வண்ணார்களும் நாவிதர்களும் இருந்தார்கள். இவர்கள் தாங்கள் ஊழியம் செய்யும் குடும்பங்கள் கொடுத்த உணவு, உடை முதலியவற்றைப் பெற்று, அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். செய்த வேலைக்கு ரொக்க ஊதியம் எதையும் அவர்கள் பெறவில்லை. இந்தப் பொருளாதார முறை பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாக மாறுதல் அடைந்தது. எந்த வேலைக்கும் ரொக்கப் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாயிற்று. பிராமணர்கள் தாங்கள் அர்ச்சனை செய்வதற்கும், நல்ல நாள் பார்த்துக் குறித்துக் கொடுப்