பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் மக்களும் 23 களுக்குக் கடல் கடந்து சென்று அங்கு தோட்டத் தொழிலாளராகவும் சிறு கடைக்காரராகவும் லேவாதேவித் தொழில் நடத்துபவராகவும் நிலையாக அந்த நாடுகளிலேயே பலர் தங்கிவிடுகின்றனர். எங்கெங்கே சென்றாலும், அந்த நாட்டின் மண்ணைப் பொன்னாக்கிய சிறப்பு தமிழ்த் தொழிலாளருக்கு உண்டு. வளம் நிறைந்த பகுதிகளுக்கு இவ்வாறு குடியேறுவது என்பது பாண்டியர் காலத்திலேயே நடைமுறையாக இருந்திருக்கிறது. அல்லி அரசாணிமாலையில் இதைப் பற்றி ஒரு பாடல் உண்டு. மதுரைப் பகுதியில் பருவ மழை தவறியதால் மக்கள் பட்ட இன்னல்களையும் அவர்கள் வேற்று நாடுகளுக்கு சென்றதையும் இப்பாடல் தெரிவிக்கிறது: புகழேந்திப் புலவர் இயற்றிய அல்லியரசாணிமாலை பாண்டியன் வறுமை யடைந்தது பாண்டிய நாட்டார்கள் பரதேசம் போகிறார்கள் மழையே கிடையாது மதுரை நகர் சீமையிலே தூற்றல் கிடையாது தென்மதுரைச் சீமையிலே துளிகள் விழுவதில்லை சொக்கர் மதுரையிலே காய்ந்து உலர்ந்தனவே கனமதுரைப் பட்டணத்தில் எரிந்து புகைகிறது ஈரங் கிடையாமல் குடிக்க நீர் கிடையாது குளங்கள் மடுக்களெல்லாம் காகங் குடிப்பதற்குங் கரண்டிசலங் கிடையாது ஆறுகள் வறண்டன ஆற்றுமணற் சூடெழும்பி ஏரிகள் வறண்டன ஏற்றக்கோ வாழமட்டும் பூமிகள் சூடெழும்பி பொங்கிற்றே தணலாக விளைவு கிடையாது வேந்தன் மதுரையிலே வு களையும் கிடையாது கனமதுரைச் சீமையிலே பொன்மதுரை நாட்டிலே புழுதி யடைந்ததுவே சருகுபோ லுலர்ந்தனவே தழைத்த மரங்களெல்லாம் பூமி யுலர்ந்ததே பூண்டு கிடையாமல் பறவை கிடையாது பாண்டியன் தேசத்திலே குடிவலசை வாங்கினார்கள் கொடிமதுரை யுள்ளவர்கள் வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை.1913. பக். 15-16