பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் பஞ்சை பனாதியாய் பரதேசம் போகிறார்கள் அன்னங்கிடையாது அழகுள்ள மதுரையிலே மதுரையைச் சுற்றுமுள்ள வனங்கள் செடிகளெல்லாம் காய்ந்துமிகத்தீய்ந்து கரும்புகைச்சல் கொண்டனவே தங்க நிழல் கிடையாது தனிமதுரைச் சீமையிலே ஊரிலே யுள்ளவர்கள் உறக்கங்கள் கொண்டார்கள் பாழடைந்த முகமானார் பாண்டிய நாட்டிலுள்ளோர் அன்ன விசாரம் அதுவே பெரிதாச்சு பன்னிரண்டு வருஷமாய்ப் பாரகருப் பாயிற்று சரீரம் வெளுத்தார்கள் சல்லடைக்கண் ணானார்கள் பெண்டுகள் புருஷர்கள் பிள்ளைகளொரு தேசம் திக்குகள் கெட்டுத் திசைமாறிப் போனார்கள். அளவு கடந்த வறுமையால் தமிழ் மக்களில் பல்லாயிரவர் பிரிட்டிஷ், பிரெஞ்சு குடியேற்ற நாடுகளுக்கு வெளியேறினர். இந்த வறுமை, மகாத்மா காந்தியடிகளையும் பாதித்தது. 1921-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இறுதியில் அடிகள் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். நாட்டுப் புறத்து உழவர்களின் அளவு கடந்த வறுமை அவர் உள்ளத்தைத் தொட்டது. அந்நிய நாட்டுத் துணியை மக்கள் கொளுத்திவிட்டனர். ஆனால் அதற்குப் பதிலாகக் கதர்த் துணி வாங்கப் பணம் இல்லாமல் அவர்கள் தவிக் 65 கிறார்கள். இனி அவர்கள் கோவணத்துணியுடன் மட்டும் வாழ்ந்து திருப்தி அடையட்டும். அவர்களுக்கு வழிகாட்டியாக, நானே இன்று முதல் என்னுடைய வேட்டியையும் தொப்பியையும் உள் சட்டையையும்கூட கைவிட்டு விடுகிறேன். ஒரு சிறு துணி மட்டுமே இனி என் ஆடையாக இருக்கும். தேவையானபோது உடலைக் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, ஒரு துண்டு உபயோகிப்பேன்” என்று காந்தியடிகள் மதுரையில்தான் முடிவு செய்தார். சுதந்தரத்துக்குப் பிறகு சில போக்குகள் 1947-இல் இந்தியா சுதந்தரம் பெற்ற பிறகு, தமிழ் நாட்டின் பொருளாதாரம், இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் மறு மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.