பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. இடமும் மக்களும் 25 பஞ்சாப், மஹாராஷ்டிரம், குஜராத் ஆகியவற்றுக்கு அடுத்தபடி தமிழ்நாடு தான் தொழில் வளம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. திட்டமிட்டு முன்கூட்டியே மின்சாரம் உற்பத்தி செய்ததாலும், தொழில் நுட்ப அறிவு எளிதில் கிடைத்தாலும், அடுத்தடுத்து வந்த அமைச்சரவைகள் மேற்கொண்ட செம்மையான தொழிற் கொள்கை களாலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. பர்மா, இலங்கை முதலிய கடல்கடந்த நாடுகளிலிருந்து திறமையும் அனுபவமும் உடைய தமிழ்த்தொழிலாளர்களும் செல்வர்களான தொழில் முதலாளிகளும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவந்தது இந்தத் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாயிற்று. சென்னை நகரில் எண்ணெய்த் தூய்மியும், எடுத்துக்காட்டாக விளங்கும் தொழிற்பேட்டைகளும் ஏற்பட்டிருப்பது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கவனத்திற்குரியது. மோட்டார்த் தொழிலும் அதனுடன் இணைந்த துணைத் தொழில்களும் சென்னையில் இயங்கு வதால் இந்நகரம் இந்தியாவின் டெட்ராயிட் என்று பெருமையுடன் வர்ணிக்கப்படுகிறது. சென்னை, மேட்டூர், தூத்துக்குடி நகரங்களில் பெட்ரோலிய இரசாயனத் தொழிற்சாலைகள் ஏராளமாக உண்டாகி யிருக்கின்றன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி எடுக்கப்படுவதால் மின்சாரமும், யூரியா உரமும், அடுப்புக்கரியாக உதவும் லீகோவும் உற்பத்தி யாகின்றன. எஃகு ஆலை, சேலத்தில் உருவாவதற்குரிய ஆரம்ப வேலைகள் தொடங்கப் பெற்றுள்ளன. பம்ப் செட்கள் செய்வதிலும் வேறு சில பொறியியல் பொருள்களை உற்பத்தி செய்வதிலும் பதனப்படுத்தப்பட்ட தோலை ஏற்றுமதி செய் வதிலும் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. திரைப் படங்கள் சென்னையில் பெரும் அளவில் எடுக்கப்படுகின்றன. ஹிந்தி மொழிப்படங்கள் சென்னையில் நிறையத் தயாராகின்றன. எனவே சென்னைதான் இந்தியாவின் ஹாலிவுட். கோயம்புத்தூரும் அதற்கு அடுத்தபடியாக மதுரையும் ஜவுளி ஆலைத் தொழிலுக்குப் பெரிய கேந்திரங்களாக உள்ளன். ஆமதா பாதில் நெசவுப் பகுதியும் ஒவ்வொரு ஆலையிலும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டு ஆலைகள் பெரும்பாலும் வெறும் நூல் ஆலைகளே. இவை நூல் நெய்து, தறிகாரர்களுக்கு வழங்குவதற்காக ஏற்பட்டவை. சிமெண்டு, சர்க்கரை உற்பத்திகளிலும் தமிழ்நாடு பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஒரு சில காகித ஆலைகளும் உள்ளன. வேளாண்மைத் துறையில் சிறிது சிறிதாக இயந்திரக் கலப்பை