பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் காலங்களில் சூரியனையோ சந்திரனையோ பார்க்கக்கூடாது. கிரகண காலத்தில் அவர்கள் கை விரலில் இரும்பு மோதிரம் அணிந்து கொள்ள வேண்டும். கிரகண காலத்தில், சிறுவர்கள் புகையால் மறைக்கப்பட்ட ஒருவகைக் கண்ணாடி வழியாகச் சூரியனைப் பார்க்கிறார்கள். கிரயப் பத்திரங்களில் 'சூரியனும் சந்திரனும் உள்ள அளவும் இந்தச் சொத்தை அனுபவித்துக் கொள்ளலாம்' என்று ஒரு வாசகம் எழுதுவது மரபு. சந்திரன் நிலவைக் காதலுடனும் அழகின் இயல்புகள் பலவற்றுடனும் இணைத்துச் சொல்லுவது தமிழ்நாட்டு மரபு. இரவு அல்லது மாலை நேரத்தில் குழந்தைக்கு உணவு ஊட்டும்போது, சந்திரனைப்பார்க்கச் சொல்வது மரபு. 'நிலா நிலா ஓடி வா' என்ற பாடலைத் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் பாடி நிலாவைக் காட்டுகிறார்கள். வளர்பிறையில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்பெறுகிறார்கள். ஒரு மனிதனின் வாழ்நாள் அவன் பிறந்தது முதல் ஏற்பட்ட முழு நிலா நாட்களை வைத்துக் கணக்கிடப்படு கிறது. 1008-வது முழு நிலாநாளில், சதாபிஷேகம் என்ற பிறந்தநாட் பெருமங்கலம் பெருஞ் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இப்போது இதை 80 வயது முடிந்தவுடனேயே கொண்டாடி விடுகிறார்கள். சிலர் சூரியன் அல்லது சந்திரனின் ஒளி நீண்ட நெடுநேரம் உடலில் படுவது, உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்ற கருத்தும் நிலவு கிறது. திருமணங்கள் சூரிய சந்திராள் சாட்சியாக நடப்பதாக, குருக்கள் அறிவிக்கிறார். வானத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை மணப் பெண்ணுக்குக் காண்பித்து, 'அருந்ததி போல நீ உன் கணவனுடன் ஈருடலும் ஓர் உயிருமாய் இரு' என்று அறிவுறுத்தப்படுகிறது. பிரளயம் (கடல்கோள்) ஒரு காலத்தில் ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டதனால் எஞ்சியிருந்த மக்களும் மரங்களும் உயிரினங்களும் ஒரு படகில் ஏற்றப்பட்டு சீர்காழியில் கோயில் கொண்டுள்ள இறைவனால் காப்பாற்றப்பட்ட தாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இங்குள்ள இறைவனின் பெயர் தோணியப்பர். தோணி - படகு.