பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் காவிரியில் நீராடுவதைத் தங்கள் கடமையாகக் வருகின்றனர். கடைப்பிடித்து ஐப்பசி மாதப் பிறப்பின்போது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தி லுள்ள திருப்பராய்த்துறையில் அகண்ட காவிரியில், காவிரி கொள்ளிடம் என இரு கிளைகளாகப் பிரியும் இடத்தில், நீராடுவது பெரியதொரு புண்ணியமாகக் கருதப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும், முப்பது நாட்களும் காவிரிக் கரையெங்கும் மக்கள் திரள் திரளாகச் சென்று நீராடி இன்புறுகின்றனர். அதன் மூலம் உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் பெறுகின்றனர். மயிலாடுதுறை என்னும் மயூரத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. ஒருவன் முடவன். ஐப்பசி 29 நாளும் அவனால் காவிரியில் குளிக்க இயலாமல் போயிற்று. எனவே எப்படியாவது ஐப்பசி 30-ம் நாளி லாவது காவிரியில் நீராட மயூரத்திற்கு விரைந்தான். ஆனால் அவனால் அன்றுகூட வந்துசேர முடியவில்லை. கடவுள் அவனு டைய பக்தியை மெச்சி மறுநாள் - கார்த்திகைத் திங்கள் முதல் நாளில் - அவனை நீராடச் செய்து அவனுக்கு மோட்சம் கொடுத்தார். அன்று முதல் காவிரியில் மயூரத்தில் ஆடுவது முடவன் முழுக்கு என்ற பெயரில் கார்த்திகை முதல் நாளில் புனிதமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. - 'ஆறு இரண்டும் காவிரி அதன் நடுவே திருவரங்கம்' என்பது ஒரு நாட்டுப் பாடலின் பகுதி. இப்பாடல் காவிரியின் பெருமை யையும் அது உண்டாக்கும் ஸ்ரீரங்கம் தீவின் தலச் சிறப்பையும் கூறுகிறது. காவிரியில் குளிக்கும்போது, காவிரிக்கு காணிக்கையாக சிறு சங்கு, வெள்ளி அல்லது தங்கத்தில் மீன் வடிவத்தில் செய்யப்பட்ட தகடு, தேங்காய், கடுக்கன், கருமணி, காசு முதலியவற்றை ஆற்றுக்குள் போடுவது மரபு. சுருங்கச் சொன்னால், காவிரி ஆறு என்பது ஓடுகிற தண்ணீர் மட்டும் அன்று. தமிழ் நாட்டு வரலாறு, நம்பிக்கைகள் மரபுகள் பாடல்கள் வாழ்வு ஆகிய அனைத்தும் காவிரியுடன் இணைந்துள்ளன. தமிழ் நாட்டின் தொன்மையான பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் காவிரி ஓர் அடையாளமாக விளங்குகிறது. காவிரியில் நேற்று ஓடின நீர் இன்று இல்லை. இன்று வருவது புதிய நீர். பல நூற்றாண்டுகளில் காவிரியின் போக்கும் சில இடங்களில் திக்குமாறி உள்ளது. இருந் தாலும் காவிரி என்பது ஒரே ஆறுதான். நமது பாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் இதில்தான் குளித்தார்கள்; இதைத்தான்